தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், தண்ணீர் பிரச்சினை தீரும் வரை ஓட்டல்களில் மதிய உணவை நிறுத்த ஆலோசித்துவருவதாகச் சென்னை ஓட்டல்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் போதிய மழை பெய்யாததால் தண்ணீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது. இந்த நிலையில் ஐடி ஊழியர்கள், பொதுமக்கள் எனப் பலரும் போதிய தண்ணீர் வசதி இன்றி அவதிப்பட்டுவருகின்றனர். இந்நிலையில் சென்னையில் ஓட்டல்களில் மதிய உணவை நிறுத்தலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக ஓட்டல்கள் சங்கத் தலைவர் ரவி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், “இட்லி தோசை போன்ற டிபன் வகைகளுக்குக் குறைந்த தண்ணீர் போதும். மதிய சாப்பாட்டிற்கு மட்டும் சாம்பார் ரசம் காரக்குழம்பு மோர் கூட்டுப் பொரியல் போன்றவை தனித்தனி பாத்திரங்களில் வழங்கப்படுகின்றன. இதனால் மதிய உணவு சமைப்பதற்கு அவற்றை விநியோகம் செய்வதற்கு அதிக அளவு தண்ணீர் தேவைப்படுகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டால், தண்ணீர் விலையும் அதிகரித்துள்ளது. 12 ஆயிரம் லிட்டர் தண்ணீர் முதலில் ரூ.1800க்கு வாங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.5000 ஆயிரம் வரை விலை கொடுக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே, தண்ணீர் பிரச்சினை இன்னும் அதிகமானால், மதிய சாப்பாடு விற்பனையை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை, இந்த முடிவைத் தான் ஹோட்டல் உரிமையாளர்கள் எடுக்க வேண்டியது வரும்” என்று தெரிவித்தார்.
இது குறித்து தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர் சங்கத் தலைவர் சுப்பராவ் கூறுகையில், “தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டிருக்கும் இந்த நிலையில் மழை நீர் சேகரிப்பு திட்டம் அமைக்கவேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் நிலவுவதால் உணவகங்களில் மதிய உணவு விற்பனையை நிறுத்தலாமா என ஆலோசித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
ஏற்கனவே ஐடி ஊழியர்களை வீட்டிலிருந்த படியே வேலை செய்ய அறிவுறுத்தப்பட்ட நிலையில் தற்போது இந்த அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியை டென்ஷன் ஆக்கிய தினகரன்- வாய்ப்பூட்டு பின்னணி!](https://minnambalam.com/k/2019/06/13/76)**
**[மூடப்படும் அருவிகள்: கேரளத்தில் பண மழை!](https://minnambalam.com/k/2019/06/14/20)**
**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**
**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**
**[பசங்கதான் பொண்ணுங்கள தெரிஞ்சிக்கணும்: அஜித்](https://minnambalam.com/k/2019/06/13/70)**
�,”