}ட்விட்டர் பஞ்சாயத்து: குரல் உண்டு; பெயர் இல்லை!

Published On:

| By Balaji

எங்கேயோ கேட்ட குரல்?

மேலே சொல்லப்பட்டிருக்கும் வார்த்தைகளைச் சாதாரண மக்கள் பொதுவாகக் கேட்டிருக்க முடியாது. ஆனால், இதை தினமும் கடந்துவரும் ஓர் உழைப்பாளர் வர்க்கம் இருக்கிறது. அவர்கள்தான் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்கள். உங்க குரலை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே? என்ற வார்த்தையும், படத்துல கேட்டிருப்பீங்க என்ற பதிலும், அதைத் தொடர்ந்து வரும் எந்த கேரக்டர்ல நடிச்சிருக்கீங்க என்ற மறுகேள்வியும் அயர்ச்சியைக் கொடுக்காமல், அதையே உற்சாகமாகக் கொண்டு இயங்கி வரும் நடிகர்-நடிகைகளுக்குப் பின்னணிக் குரல் கொடுக்கும் கலைஞர்களுக்குத் தமிழ் சினிமா எப்போதும் காட்டுவது பாராமுகம் தான். இதைச் சிலர் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், அடக்கிவைக்கப்படும் இந்த ஆதங்கம் ஒரு கணம் பொங்கி வரும் அல்லவா? அப்படித்தான், பின்னணிக் குரல் கலைஞர் ரவீனா ரவி என்பவருக்கு ஏற்பட்டது ஓர் ஆதங்கம்.

அயோக்யா திரைப்படத்தில் நடிகை ராஷி கண்ணாவுக்குப் பின்னணிக் குரல் கொடுத்தவர் ரவீனா தான். ஆனால், திரைப்படத்தின் எந்த இடத்திலும் அவருக்கான அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை. பொதுவாகப் படம் தொடங்கும்போது இடம்பெறும் பெயர்களை தற்போது கடைசியாக மாற்றிவிட்டார்கள். அப்படி திரைப்படத்தை கடைசிவரை பார்த்துவிட்டு, எல்லோரும் எழுந்து செல்லும்போதும் தனது பெயரைப் பார்த்துவிட்டுச் செல்லலாம் எனக் காத்திருக்கும்போது, அந்தப் பெயர் வராமலேயே போகும்போது ஏற்படும் ஏமாற்றத்தின் வெளிப்பாடாக, அயோக்யா படத்தில் தனது பெயர் இடம்பெறாததை ட்விட்டரில் பதிவாக மேற்கொண்டார் ரவீனா. இவருக்கு ஆதரவாகப் பலரும் வந்து கமெண்ட் செய்தாலும், அவர் யாருக்குக் குரல் கொடுத்தாரோ, அந்த நடிகையான ராஷி கண்ணாவே வந்து மன்னிப்பையும் பாராட்டையும் கொடுத்தார்.

ரவீனாவின் பெயர் இடம்பெறாததற்குக் காரணம் ராஷி கண்ணா இல்லையென்றாலும், தன்னுடைய தவறும் இருப்பதாக உணர்ந்து மன்னிப்பு கேட்ட ராஷி கண்ணாவின் செயல் பாராட்டத்தக்கது. ஆனால், ரவீனாவின் குரலைத் தாண்டி அவரது எண்ணம் வெளிப்பட்டதுபோல, பல பின்னணிக் குரல் கலைஞர்களும் வெளிப்படத் தொடங்கினால் அவர்களுக்கான நியாயம் கிடைக்கும். .

.

**

மேலும் படிக்க

**

.

**

[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/53)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: கமலின் நாக்கு- அமைச்சரை பாராட்டிய முதல்வர்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/88)

**

.

**

[விமர்சனம்: மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/7)

**

.

**

[மோடி காய்ச்சல்: சந்திரபாபு நாயுடு பரபரப்பு!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/52)

**

.

**

[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/27)

**

.

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share