|ட்விட்டர்: ட்ரம்ப் முதலிடம், மோடி மூன்றாமிடம்!

Published On:

| By Balaji

ட்விட்டரில் அதிகமாகப் பின் தொடரப்படும் பிரபலங்கள் பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்பும், மூன்றாமிடத்தில் பிரதமர் மோடியும் இடம் பிடித்துள்ளனர்.

பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலை தளங்களில் அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களுக்கான கணக்குகளை வைத்துள்ளனர். இதன் மூலம் தங்களுடைய எண்ணங்களையும், பிரச்னைகள் தொடர்பான தங்கள் கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். அரசியல் தலைவர்கள் தங்களுடைய அன்றாட நிகழ்வுகளை புகைப்படங்களுடன் வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பர்ஸான் கோகன் என்னும் தகவல் ஆய்வு நிறுவனம், சமூக வலை தளங்களில் பின் தொடரப்படும் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் 951 பேரின் பின் தொடர்வோர் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்து அந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. 2017 மே முதல் 2018 மே வரையிலான புள்ளிவிவரங்களை சேகரித்து இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி ட்விட்டரில் அதிக நபர்களால் பின் தொடரப்படும் பிரபலங்கள் பட்டியலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதலிடம் வகிக்கிறார். அவரை 5. 2கோடி நபர்கள் பின் தொடர்கின்றனர். 4.7 கோடி பின் தொடர்பவர்களுடன் 2வது இடத்தில் போப் பிரான்சிஸ் உள்ளார். மூன்றாவது இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். இவரின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கைப் பின் தொடர்வோர் எண்ணிக்கை 4.2 கோடியாக உள்ளது.

ட்விட்டரில் அதிகமாகப் பின் தொடரப்படும் அரசியல் தலைவர்கள் பட்டியலில் மோடி இரண்டாவது இடத்தை வகிக்கிறார். அதே சமயத்தில் முகநூலில் அதிகமாக பின் தொடர்வோர் பட்டியலில் 4.3 கோடி பின் தொடர்பவர்களுடன் பிரதமர் மோடி முதலிடம் வகிக்கிறார். ட்ரம்ப் இரண்டாமிடம் வகிக்கிறார்.அதிகமாகப் பின் தொடரப்படும் வெளியுறவுத் துறை அமைச்சர்களில் சுஷ்மா சுவராஜ் முதலிடத்தில் உள்ளார். இவரை 1.1 கோடி பேர் பின் தொடர்கின்றனர்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share