டொயோட்டா: மின்சாரக் கார் தயாரிக்க திட்டம் இல்லை!

public

இந்தியாவில் மின்சாரக் கார்களை அறிமுகப்படுத்தும் திட்டம் ஏதும் இல்லை என்று ஜப்பானைச் சேர்ந்த டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் காற்று மாசுமாட்டை குறைக்கும் வகையில் 2030ஆம் ஆண்டுக்குள் அனைத்து கார்களையும் மின்சாரக் கார்களாக மாற்ற மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதனால் இந்தியாவில் கார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் இப்போதிருந்தே மின்சாரக் கார்கள் தயாரிப்பில் ஈடுபட கவனம் செலுத்தி வருகின்றன.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் துணை தலைவர் சேகர் விஸ்வநாதன், தற்போது மின்னணு கார்கள் தயாரிப்பது குறித்து எந்தத் திட்டமும் இல்லை. டொயோட்டா நிறுவனம் தற்போது சில வெளிநாடுகளில் மட்டுமே மின்சாரக் கார்கள் தயாரித்து வருகிறது. ஆனால் இந்தியாவில் மின்சாரக்கார்கள் உற்பத்தி செய்வதற்கு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியுள்ளது. அதற்கு இன்னும் சிறிது காலமாகும்” என்றார்.

இந்திய கார் விற்பனை சந்தையில் பெரும்பங்கு வகிக்கின்ற மாருதி சுசுகி நிறுவனம் அண்மையில், இந்தியாவில் மின்சாரக் கார்கள் தயாரிப்பில் ஈடுபட குஜராத்தில் ஆலை ஒன்றை அமைத்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0