டிஜிட்டல் டைரி! 12 – சைபர் சிம்மன்
இந்தியரான அஜய் நேகருக்கு 19 வயது ஆகிறது. ஆனால் இதற்குள் டைம் பத்திரிகையின், அடுத்த தலைமுறை தலைவர்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார். இசை, அரசியல், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் புதிய பாதை வகுத்துவருபவர்களிலிருந்து மணி மணியான பத்துப் பேரைத் தேர்வு செய்து டைம் பத்திரிகை இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
டைம் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியரான அஜய் நேகர், கேரி மினாட்டி எனும் யூடியூப் சேனல் மூலம் வீடியோக்களை வெளியிட்டுவருகிறார். இந்தி மொழியில் வெளியாகும் இவரது வீடியோக்களுக்கு இணையத்தில் பெரிய ரசிகர் கூட்டமே இருப்பதாகத் தெரிகிறது. கிட்டத்தட்ட எழுபது லட்சம் சந்தாதாரர்கள் இருக்கின்றனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
இந்த எண்ணிக்கையும் இது அளிக்கும் செல்வாக்கும்தான் டைம் பத்திரிகையின் கவனத்தை ஈர்த்துள்ளன. சமூக ஊடக நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு வீடியோக்களை உருவாக்கிவரும் நேகர், தனது 10ஆவது வயதில் முதல் வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதன் பிறகு நூற்றுக்கும் மேற்பட்ட வீடியோக்களை உருவாக்கித் தனக்கான ரசிகர் பட்டாளத்தைத் தேடிக்கொண்டிருக்கிறார்.
டாம் குரூசின் மிஷன் இம்பாசிபில் துவங்கி பப்ஜி இணைய விளையாட்டு உள்பட பல விஷயங்களுக்காக வீடியோ பதிவுகளை உருவாக்கியுள்ளார் நேகர்.
யூடியூப் முதலிடத்திற்கு ஸ்வீடன் யூடியூப் நட்சத்திரம் பியூடைபைக்கும் இந்தியாவின் டி-சிரீஸ் சேனலுக்கும் இடையே பலத்த போட்டி நிலவியபோது, இந்தியர்கள் தொடர்பாக பியூடைபை தெரிவித்த கருத்துக்கு பதிலடி கொடுத்து நேகர் வெளியிட்ட வீடியோ பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது.
இந்தியக் கலாச்சாரத்தைக் கிண்டலடிக்கும் எவருக்கும் பதிலடி தருவதுதான் தனது வேலை என நேகர் உற்சாகமாகக் கூறியிருக்கிறார். இணையத்தில் நீங்கள் நீங்களாக இருந்தால் வெற்றி பெறலாம் என்றும் கூறியிருக்கிறார்.
[நேகரின் யூடியூப் சேனல்](https://www.youtube.com/watch?v=ncPdCL3aafc&feature=youtu.be)
**இனி எல்லாம் ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ மயம்**
‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ எனும் தொலைக்காட்சித் தொடர் மிகவும் பிரபலம் என்பது பழைய செய்திதான். இணையத்திலும் பிரபலமாக இருக்கும் இந்தத் தொடரின் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் வகையில் சுவாரஸ்யமான இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இன்டெர்நெட் ஆப் த்ரோன்ஸ் எனும் அந்தத் தளத்தில் நீங்கள் எந்த இணையதள முகவரியைச் சமர்பித்தாலும், அந்தத் தளத்தை கேம் ஆப் த்ரோன்ஸ் தளமாக மாற்றிக் காட்டுகிறது.
மாற்றப்பட்ட தளத்தில் எல்லாப் படங்களும் செய்திகளும் கேம் ஆப் த்ரோன்ஸ் தொடர்பானதாக இருக்கும்.
இந்த தளத்தின் முகப்புப் பக்கத்தில், விக்கிபீடியா, ரெட்டிட், யூடியூப், ட்விட்டர், ஃபேஸ்புக் எனப் பிரபலமான தளங்களை எல்லாம் கேம் ஆப் த்ரோன்ஸ் தளமாக மாற்றித் தோன்றச்செய்துள்ளனர்.
இத்தகைய மேஜிக்கை நிகழ்த்தும் இந்தத் [தளம்](https://internet-of-thrones.herokuapp.com/) தற்போது வேகமாகப் பிரபலமாகிவருகிறது.
**ட்விட்டரில் கேளுங்கள், பதில் கிடைக்கும்**
கேள்வி பதில்கள் என்று வரும்போது இணையத்தில் [குவோராவை](https://www.quora.com/) அடித்துக்கொள்ள முடியாது. அதனால்தான் குவோரா கேள்வி பதில்களுக்கான இணைய சமூகம் என வர்ணிக்கப்படுகிறது. ஆனால், குவோராவைத் தவிரவும் பல தளங்களில் பயனுள்ள கேள்வி பதில்களைப் பார்க்கலாம். இவ்வளவு ஏன், குறும்பதிவுச் சேவைத் தளமான ட்விட்டரிலும் பல சுவாரஸ்யமான கேள்விகள் கேட்கப்படுகின்றன.
இப்படி டிவிட்டரில் கேட்கப்படும் கவனத்திற்குரிய கேள்விகளை எல்லாம் தொகுத்துத் தருவதற்கு என்றே, [ரியல் குட் கொஸ்டின்ஸ்](https://reallygoodquestions.co/) எனும் இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தளம் ட்விட்டரில் முக்கிய நபர்களும், வல்லுனர்களும் கேட்கும் கேள்விகளைத் தேடி எடுத்துப் பட்டியலிடுகிறது.
ட்விட்டர் பிரபலங்கள் பலர் கேட்டுள்ள கேள்விகளை முகப்புப் பக்கத்தில் பார்க்க முடிகிறது. கேள்விகளுக்கான பதில்கள் தொடர்புடைய விவாதச் சரட்டையும் பார்க்க முடிகிறது.
ட்விட்டரில் எத்தனை விதமான கேள்விகள் கேட்கப்படுகின்றன என்ற வியப்பும் ஏற்படுகிறது. சுவாரஸ்யமான கேள்விகளைக் கண்டறிய இந்தத் தளம் உதவியாக இருக்கும். பயனாளிகள் விரும்பினால் தாங்கள் எதிர்கொள்ளும் ட்விட்டர் கேள்விகளையும் இந்தத் தளத்தில் சமர்பிக்கலாம்.
[உங்கள் இணைய ஷாப்பிங்கைப் பின்தொடரும் கூகுள்!](https://minnambalam.com/k/2019/05/24/18)
.
.
**
மேலும் படிக்க
**
.
.
**
[ரயில்வே இணையமைச்சர் ஆகிறார் ரவீந்திரநாத்?](https://minnambalam.com/k/2019/05/26/55)
**
.
**
[அதிமுகவில் ராஜ்யசபா ரேஸ்!](https://minnambalam.com/k/2019/05/26/52)
**
.
**
[இடைத்தேர்தல் தோல்வி: நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை](https://minnambalam.com/k/2019/05/26/32)
**
.
**
[திருநாவுக்கரசர் மீது திமுக அதிருப்தி!](https://minnambalam.com/k/2019/05/26/41)
**
.
**
[வாக்குகளை வழிப்பறி செய்துள்ளது திமுக அணி: ராமதாஸ்](https://minnambalam.com/k/2019/05/26/35)
**
.
.�,”