`டேக் ஓகே: முடிவை மாற்றிய சாய் பல்லவி

public

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள என்ஜிகே திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை சாய்பல்லவி கூறியுள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் முதன்முறையாக சூர்யா நடிக்கிறார் என்ற தகவல் வெளியானதிலிருந்தே படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி என இரு கதாநாயகிகள் நடிக்கும் இப்படம் கடந்த ஆண்டே வெளியாவதாக அறிவிக்கப்பட்ட போதும் படத்தின் பணிகள் நிறைவுபெறாததால் மே 31ஆம் தேதி வெளியாகவுள்ளது.

ரிலீஸுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் படத்திற்கான புரொமோஷன் பணிகள் வேகமெடுத்துள்ளன. அந்த வகையில் செல்வராகவன் இயக்கத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசிய சாய் பல்லவி, “ நடிப்பு என்றால் என்ன என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேனோ, அதெல்லாம் முற்றிலும் தவறாகிவிட்டது. ஒருநாள், காலை முதல் மாலை வரை இயக்குநர் செல்வராகவன் நினைத்த மாதிரி நடிப்பு எனக்கு வரவில்லை. ‘நாளை பார்க்கலாம்’ என்று கூறிவிட்டார். அன்று இரவு, ‘எனக்கு நடிப்பு வரவில்லை. மருத்துவராகவே இருந்து விடுகிறேன்’ என்று என் அம்மாவிடம் கூறிவிட்டேன். அன்று முழுவதும் அழுதுகொண்டே இருந்தேன்.

ஆனால், மறுநாள் ஒரே டேக்கில் அவர் நினைத்தது வந்துவிட்டது என்று கூறிவிட்டார். அதை நம்பாமல், ‘என் அம்மா உங்களிடம் பேசினார்களா?’ என்று செல்வராகவனிடம் கேட்டேன். ‘இல்லை, நான் கேட்டது கிடைத்துவிட்டது’ என்றார்.

பின்னர், சூர்யா சாரிடம் கேட்டபோது, ‘நானும் நிறைய டேக் வாங்கித்தான் நடிக்கிறேன்’ என்றார். அதன் பிறகுதான் சிறிது ஆறுதலாக இருந்தது” என்று சாய் பல்லவி கூறியுள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க, ரிலையன்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் வெளியிடுகிறது.

.

.

**

மேலும் படிக்க

**

.

.

**

[பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராவார்: தங்க தமிழ்ச்செல்வன்](https://minnambalam.com/k/2019/05/24/58)

**

.

**

[திமுக மக்களவைக் குழுத் தலைவர் யார்?](https://minnambalam.com/k/2019/05/24/63)

**

.

. **

[ராஜ்யசபா: அன்புமணியின் அடுத்த மூவ்!](https://minnambalam.com/k/2019/05/24/9)

**

.

.

**

[திமுக எம்.பி.க்களின் ரகசிய புலம்பல்!](https://minnambalam.com/k/2019/05/24/30)

**

.

**

[அமேதியில் ராகுல் வீழ்ந்த பின்னணி!](https://minnambalam.com/k/2019/05/24/33)

**

.

.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *