உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவடைந்தவுடன் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசைப் பட்டியல் வெளியான நிலையில் தற்போது டெஸ்ட் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
பேட்டிங்கில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 922 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார். நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 913 புள்ளியுடன் 2ஆவது இடத்தில் உள்ளார்.
டெஸ்ட் அணியில் மட்டும் தொடர்ந்து இடம்பெற்றுவரும் புஜாரா 881 புள்ளியுடன் 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் 857 புள்ளியுடன் 4ஆவது இடத்திலும், நியூசிலாந்தைச் சேர்ந்த நிக்கோல்ஸ் 5ஆவது இடத்திலும் உள்ளனர்.
பந்து வீச்சில் ஆஸ்திரேலிய வீரர் கம்மின்ஸ் 878 புள்ளியுடன் முதல் இடத்தில் உள்ளார். இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் 862 புள்ளியுடன் 2ஆவது இடத்திலும், தென்னாப்பிரிக்க வீரர் ரபாடா 851 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திலும் உள்ளனர். இந்திய வீரர்களில் ஜடேஜா 794 புள்ளியுடன் 6ஆவது இடத்திலும், அஷ்வின் 763 புள்ளியுடன் 10ஆவது இடத்திலும் உள்ளனர்.
ஆல்ரவுண்டர் வரிசையில் ஜடேஜா 3ஆவது இடத்தில் உள்ளார். மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த ஜேசன் ஹோல்டர் முதல் இடத்திலும், வங்க தேச வீரர் ஷகிப் அல் ஹசன் 2ஆவது இடத்திலும் உள்ளனர்.
அணிகளுக்கான தரவரிசையில் இந்தியா 113 புள்ளியுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது. நியூசிலாந்து 111 புள்ளிகளுடன், 2ஆவது இடத்திலும், தென்னாப்பிரிக்கா 108 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திலும் உள்ளன.
உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி 4ஆவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா, இலங்கை, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள், வங்க தேசம் ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.
**
மேலும் படிக்க
**
**[சசிகலாவின் அருமை இப்போது புரிகிறதா? -அமமுகவின் வீடியோ](https://minnambalam.com/k/2019/07/24/49)**
**[மா.சுப்பிரமணியனுக்கு அரசு வீசும் வலை!](https://minnambalam.com/k/2019/07/24/43)**
**[முன்னாள் மேயர் கொலை: நெல்லையில் பதற்றம்!](https://minnambalam.com/k/2019/07/24/25)**
**[ டிஜிட்டல் திண்ணை: தமிழிசை-ராஜா மோதல்!](https://minnambalam.com/k/2019/07/23/77)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**
�,”