டீசல் விலை உயர்வு: மாடுகளுக்கு மாறும் விவசாயிகள்!

public

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகளின் வருமானத்தில் சரிவு ஏற்படுகிறது. கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் டீசல் விலை கடுமையாக உயர்ந்துவிட்டது. இதனால் டிராக்டர் போன்ற இயந்திரங்களைப் பயன்படுத்துவது குறித்து விவசாயிகள் ஆலோசித்து வருகின்றனர்.

இதுகுறித்து, சவுராஷ்டிராவைச் சேர்ந்த விவசாயத் தலைவரான பிரஃபுல் செஞ்சலியா ‘தி இந்து’ ஊடகத்திடம் பேசுகையில், “பல்வேறு பயிர்களை உற்பத்தி செய்வதற்கான செலவுகளில், போக்குவரத்து, பம்பு செட் போன்றவற்றுக்கான செலவுகள் 25 விழுக்காடு பங்கு வகிக்கின்றன. நாளுக்கு நாள் டீசலின் விலை உயர்ந்து கொண்டே போகிறது. ஆனால், அதே வேகத்தில் பயிர்களின் விலை உயர்வதில்லை. டிராக்டர்களுக்குப் பதிலாகக் காளை மாடுகளைப் பயன்படுத்த பல விவசாயிகள் ஆர்வம்காட்டி வருகின்றனர். இது பொருளாதார ரீதியாக விவசாயிகளுக்கு ஏதுவானதாக இருக்கிறது” என்று கூறினார். பல்வேறு பயிர்களுக்கான திருத்தியமைக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஏற்ப டீசல் விலை உயர்வு இருப்பதில்லை என்று வேளாண் பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர். இதன் விளைவாக, குறைந்தபட்ச ஆதரவு விலை விவசாயிகளுக்கு லாபகரமாக இருப்பதில்லை. அகமதாபாத்தைச் சேர்ந்த வேளாண் பொருளாதார வல்லுநரான பேராசிரியர் ஹேமந்த் குமார் ஷா பேசுகையில், “விவசாய உள்ளீட்டுச் செலவுகளைக் கணக்கிடுகையில், டீசல் விலை உயர்ந்து வரும் வேகத்தை, வேளாண் செலவுகள் மற்றும் விலைகள் குழு (Commission for Agricultural Costs and Prices) கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. பெட்ரோல், டீசல் விலை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. ஆனால், குறைந்தபட்ச ஆதரவு விலையோ ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே அறிவிக்கப்படுகிறது” என்று கூறினார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *