டிஜிட்டல் லைசென்ஸ் : முதல்வர் பழனிச்சாமி தகவல்!

public

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.க்கு டிஜிட்டல் லைசென்ஸ் வழங்குவது குறித்து மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவிடம் முதல்வர் பழனிச்சாமி இன்று ஆலோசனை நடத்தினார்.

மூன்று நாட்கள் அரசுப் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அமைச்சர்கள் நிதின் கட்காரி, வெங்கய்யா நாயுடு, ரவிசங்கர் பிரசாத் ஆகியோரை இன்று நேரில் சந்தித்துப் பேசினார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பிற்பகல் மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் எம்.வெங்கய்யா நாயுடுவை அவரது அமைச்சகத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட ஸ்மார்ட் நகரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். தமிழக அரசு கேபிள் டி.வி.க்கு டிஜிட்டல் லைசென்ஸ் அனுமதி கிடைக்காமல் உள்ளது குறித்தும் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

அதன்பின்னர், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் மேலும் பல வீடுகள் ஒதுக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியதாகக் கூறினார். மேலும் நகர மேம்பாடு திட்டமான அம்ருத்தில் நாமக்கல் உட்பட 4 நகரத்தைச் சேர்ப்பது பற்றி பரிசீலனை செய்ததாகத் தெரிவித்தார். தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.க்கு டிஜிட்டல் லைசென்ஸ் தருவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் வெங்கய்யா நாயுடு குறிப்பிட்டார்.

பின்பு, மத்திய சட்டம் மற்றும் நீதி மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை சந்தித்து தமிழகத்திற்கு தேவையான திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். தமிழக அரசு கேபிள் டி.வி.யை டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்ற அனுமதிப்பது குறித்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு மூன்று முறை கடிதம் எழுதியிருந்தார். ஒருமுறை நேரில் சந்தித்தும் வலியுறுத்தியிருந்தார். ஆனால் மத்திய அரசு இதுவரை அனுமதி அளிக்காமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *