டேட்டா ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். “ஈ.சி.ஆர். சாலையில் ஒரு பஞ்சாயத்து… வந்து சொல்கிறேன்!” என்று மினி மெசேஜ் தட்டிவிட்டது வாட்ஸ் அப்.
சற்று நேரத்துக்குப் பிறகு வாட்ஸ் அப்பில் இருந்து விலாவாரியாக வந்து விழுந்தது அந்த மெசேஜ்.
“ஈ.சி.ஆர். சாலையில் விஜிபி எல்லாம் தாண்டிய பிறகு கடற்கரையை ஒட்டியது போலவே இருக்கிறது அந்த பங்களா. நேற்று மதியத்துக்குப் பிறகு விபச்சார தடுப்பு போலீஸ் டீம் அந்த பங்களாவுக்குள் போனது. உள்ளே இரண்டு ஆண்களும், ஒரு பெண்ணும் இருந்திருக்கிறார்கள். அந்தப் பெண் எல்லோருக்கும் அறிமுகமான டிவி சீரியல் நடிகை. கடவுள் பெயரைத் தொடக்கத்தில் வைத்திருப்பவர். சீரியல் பார்க்கும் எல்லோருக்கும் அந்த நடிகை பெயரை விட, அவர் நடித்த கேரக்டர் பெயரை சொன்னால் தெரியும் அளவுக்கு பரிச்சயம். ‘இங்கே என்ன பண்றீங்க? இது யாரு வீடு?’ என்று போலீஸார் அந்த நடிகையிடம் விசாரித்திருக்கிறார்கள்.
‘யாரு வீட்டுக்கு வரணும்னு உங்ககிட்ட சொல்லிட்டுதான் வரணுமா?’ என எகத்தாளமாகக் கேட்டிருக்கிறார் அந்த நடிகை. வீட்டில் இருந்த அந்த இரண்டு ஆண்களிடமும் விசாரணை நடந்திருக்கிறது. அவர்களில் ஒருவர் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர். இன்னொருவர் சென்னையில் இருக்கும் அவரது நண்பர். போலீஸைப் பார்த்ததும் அந்த இருவரும்தான் மிரண்டுவிட்டார்களாம். ‘நீ என்ன பண்றன்னு எங்களுக்கு தெரியும். ஆதாரம் எல்லாம் எங்ககிட்ட இருக்கு. உன்னை அரெஸ்ட் பண்றோம்..’ என்று ரெய்டு போன போலீஸ் சொல்ல… கவலையே இல்லாமல் கூலாக, அந்த நடிகை போனை எடுத்து, ‘நான்தான் பேசுறேன். ஏதோ ரெய்டுங்குறாங்க. என்னை அரெஸ்ட் பண்ண வந்திருக்காங்களாம்… என்னன்னு கேளு..’ என சொல்லிவிட்டுப் போனை வைத்திருக்கிறார்.
‘மேடம் நீங்க யாருகிட்ட வேணும்னாலும் பேசிக்கோங்க. நீங்க விபச்சாரத்துல ஈடுபடுவது எங்களுக்கு தெரியும். ஆதாரத்துடன்தான் பிடிச்சிருக்கோம். இந்த மிரட்டல் எல்லாம் எங்ககிட்ட வச்சுக்காதீங்க…’ என்று வசனம் பேசி முடிப்பதற்குள், ரெய்டு போன இன்ஸ்பெக்டர் போன் அலறியிருக்கிறது. போனை எடுத்தார்… ‘ஐயா… ’ என்று ஆரம்பித்தவர், ‘ஈசிஆர்ல ஒரு வீட்டுல புராஸ்டியூசன் நடக்குதுங்கய்யா.. கன்பார்ஃம் பண்ணிட்டுதாங்கய்யா வந்திருக்கோம்…’ என்றவர் எதிர் முனையில் பேசியதைக் கேட்டு தலையாட்டியவர், ‘உத்தரவுங்கய்யா… அப்படியே செஞ்சுடுறங்கய்யா…’ என்று சொல்லிவிட்டு போனை கட் செய்திருக்கிறார்.
‘சாரி மேடம்… தப்பான தகவல் கொடுத்துட்டாங்க… சாரி மேடம்..’ என்று பவ்யம் காட்டிவிட்டு வீட்டிலிருந்து வெளியே வந்திருக்கிறார். அந்த போலீஸ் டீமை அப்படியொரு ஏளனமான பார்வை பார்த்திருக்கிறார் நடிகை“ என்று முடிந்தது அந்த மெசேஜ்.
“சரி… போன் செய்தது யார்.. என்ன நடந்தது என விசாரிக்கவில்லையா?” என ஃபேஸ்புக் கேட்டது.
பதில் அடுத்த மெசேஜில் வந்தது. “விசாரிக்காமல் இருப்பேனா? விசாரித்துவிட்டேன். அந்த நடிகைக்கும் ஆளுங்கட்சியில் மிக மிக முக்கியமான ஒருவருக்கும் ஆரம்பத்தில் இருந்தே நட்பு இருந்திருக்கிறது. முக்கியமானவருக்கு இப்போது பல முக்கிய வேலைகள் இருப்பதால், நடிகையின் நட்பு முக்கியமானவரின் உதவியாளருடன் தொடர்ந்தது. அந்த உதவியாளரும், அவரது நண்பர்களும் அந்த நடிகையை அடிக்கடி சந்திப்பதும் வருவதுமாக இருந்தார்கள். காவல் துறை வீட்டுக்குள் நுழைந்ததும், அந்த நடிகை போன் செய்தது முக்கியமானவரின் உதவியாளருக்குதான். அவரோ, உடனடியாக முக்கியமானவரிடம் விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். ‘சார் அவங்க மாட்டினால் நம்ம எல்லோருமே சிக்கல்தான். நீங்களும் அந்த நடிகையும் எடுத்துகிட்ட போட்டோஸ்கூட இருக்கு. அதனால உடனே போலீஸ்க்கு பேசுங்க…’ என்று உதவியாளர் சொன்னதும், சம்பந்தப்பட்ட ஐ.ஜிக்கு, முக்கியமானவரே பேசியிருக்கிறார். ஐஜியும், அவரு சொல்லிட்ட பிறகு நமக்கு எதுக்கு வம்பு என உடனடியாக ரெய்டு போனவர்களைத் திரும்பி வரச் சொல்லிவிட்டாராம்.
இது எல்லாவற்றையும்விட, இன்று காலை அந்த முக்கியமானவரின் உதவியாளரை நேரில் சந்தித்தே நன்றி சொல்லியிருக்கிறார் நடிகை. ‘இனி சிக்கல்ல மாட்டிக்கிற மாதிரி எதையும் செய்யாதே. என்ன வேணுமோ என்கிட்ட கேளு…’ என்று நடிகைக்கு அட்வைஸ் எல்லாம் கொடுத்து அனுப்பி வைத்திருக்கிறார் உதவியாளர்” என்று முடிந்த மெசேஜ்க்கு செண்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.
அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்த ஃபேஸ்புக், ‘இன்னும் எதுக்கெல்லாம் ரெக்கமெண்ட் செய்வாங்களோ…’’ என்று கமெண்ட்டில் போட்டுவிட்டு சைன் அவுட் ஆனது.�,