டிஜிட்டல் திண்ணை: சேகர் ரெட்டி நோட்டில் 4 அமைச்சர்கள்!

public

அலுவலகத்தில் வைஃபை ஆனில் இருந்தது. ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் தயாராகிக் கொண்டிருந்தது. சற்று நேரத்துக்குப் பிறகு ஸ்டேட்டஸ் போஸ்ட் ஆனது. “ முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்தின் நெருக்கமான நண்பரான சேகர் ரெட்டி இப்போது சிறைக்குள் இருக்கிறார். சேகர் ரெட்டி வீட்டை சோதனையிட்ட போது சிக்கிய ஆவணங்களில் சில அமைச்சர்கள் பெயர் இருப்பதாக செய்திகள் வந்தபடி இருக்க.. அமைச்சர்கள் டென்ஷன் ஆனார்கள். ஆனால், சேகர் ரெட்டியோ நான் எந்த டைரியிலும் யார் பெயரையும் எழுதவில்லை என்று சொன்னதாகவும் சொன்னார்கள். இந்த சூழ்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் அமைச்சர்களின் அடிவயிற்றை கலங்கடித்துக் கொண்டிருக்கிறது.

சேகர் ரெட்டி வீட்டை சோதனையிட்ட போது லேப்டாப் உள்ளிட்ட சில ஆவணங்களை அள்ளிச் சென்றது வருமான வரித்துறை. அத்துடன் டைரி சைஸில் இருந்த சில நோட்டுகளையும் எடுத்துச் சென்றனர். அதிமுக ஆட்சியில் சேகர் ரெட்டி, பொதுப்பணி துறை, மின்சார துறை, வீட்டு வசதி துறை, நெடுஞ்சாலை துறை ஆகிய நான்கு துறைகளின் காண்ட்ராக்டுக்களை எடுத்து பிசினஸ் செய்து வந்தார். இந்த நான்கு துறைகளில் யாருக்கு என்ன கொடுக்கப்பட்டது என்ற விபரங்கள் அந்த நோட்டில் இருக்கிறது. காண்ட்ராக்டுக்காக யாருக்கு எவ்வளவு கொடுக்கப்பட்டது என்ற விபரங்களும் அந்த நோட்டில் இருக்கிறது. அதுமட்டுமல்ல.. நான்கு அமைச்சர்களின் பெயரும் அந்த நோட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம், நெடுஞ்சாலை துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, வீட்டுவசதி துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் என நான்கு அமைச்சர்கள் பெயரையும் அந்த நோட்டில் குறிப்பிட்டு இருக்கிறார் சேகர் ரெட்டி. இவர்களுக்கு ஒவ்வொரு காண்ட்ராக்ட்டுக்கும் எவ்வளவு கொடுக்கப்பட்டது என்ற விபரங்களும் அதில் தெளிவாக இருக்கிறது.

இதுமட்டுமல்ல…சில ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பெயரையும் சேகர் ரெட்டி குறிப்பிடத் தவறவில்லை. தற்போதைய முதவல்வர் பழனிசாமி பெயரும் லிஸ்டில் இருப்பதால் என்ன செய்வதென யோசிக்க ஆரம்பித்துள்ளது வருமான வரித் துறை!” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ்.

“சரி… லேப்டாப்பில் எதுவும் ஆதாரங்கள் சிக்கியதா?” என்ற கேள்வியை கமெண்ட்டில் போட்டது வாட்ஸ் அப்.

பதிலை அடுத்த ஸ்டேட்டஸ் ஆக போஸ்ட் செய்தது ஃபேஸ்புக்.

“சேகர் ரெட்டி வீட்டில் சிக்கிய டைரி சைஸ் நோட்டில்தான் இவ்வளவு ஆதாரங்களும் சிக்கியிருக்கிறது.ஆனால், லேப்டாப்பை பொருத்தவரை பெரிய ஆதாரங்கள் எதுவும் சிக்கவில்லையாம். லேப்டாப்பில் காண்ட்ராக்டு தொடர்பான விபரங்கள் மட்டும் இருக்கிறது. யாருக்கெல்லாம் பணம் கொடுக்கப்பட்டது என்ற விபரங்கள் இருந்தாலும் யாருடைய பெயரும் அதில் முழுமையாக இல்லை. உதாரணத்துக்கு கே.பி, பி,எஸ்.ஓ என கோட் வேர்டில் இன்சியல் மட்டும் குறிப்பிடப்பட்டு இருக்கிறதாம். கோட் வேர்டில் குறிப்பிடப்பட்டவர்கள் யாரென்ற விசாரணையிலும் வருமான வரித்துறையினர் இறங்கியுள்ளனர். மற்றபடி லேப்டாப்பில் எந்த அமைச்சர் பெயரையும் நேரடியாக குறிப்பிடவில்லை. “ என்ற பதில் ஸ்டேட்டஸ்க்கு லைக் போட்டது வாட்ஸ் அப்.

தொடர்ந்து, “எல்லாம் தயாராக இருந்தும் ஏன் இதுவரை யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை?” என்ற கேள்வியை மீண்டும் கமெண்ட்டில் போட்டது. பதிலை ரிப்ளையில் போட்டது ஃபேஸ்புக். “சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றுதான் முதலில் மத்திய அரசு நினைத்திருக்கிறது. ஆனால், ஜனாதிபதி தேர்தல் வரை யார் மீதும் நடவடிக்கை எடுத்து பகையை சம்பாதித்துக் கொள்ள வேண்டாம் என மத்திய அரசு நினைக்கிறது. ஜனாதிபதி தேர்தல் முடிந்த கையோடு இந்த ஆதாரங்களை வைத்து அடுத்தடுத்த நடவடிக்கைகள் பாயலாம். அதுவரை யார் மீதும் எந்த நடவடிக்கையும் இருக்காது என்றே சொல்கிறார்கள்!” என்ற பதிலுக்கும் லைக் போட்டு ஆஃப்லைனில் போனது வாட்ஸ் அப்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *