டிஜிட்டல் திண்ணை: கமலின் நாக்கு- அமைச்சரை பாராட்டிய முதல்வர்!

Published On:

| By Balaji

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் ஆன்லைன் வந்தது. சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கமல் பற்ற வைத்த தீ கொழுந்துவிட்டு எரிகிறது. அரவக்குறிச்சி தொடங்கி டெல்லி வரை பல்வேறு இடங்களில் கமல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் கமல் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலை வந்தபோது, கமல் தரப்பில் இருந்து முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த வழக்கில் திங்கள் கிழமை தீர்ப்பு வழங்கப்படும். நீதிமன்றத்தில் கமல் முன் ஜாமீன் கேட்டதில் இருந்தே முதல்வர் தரப்பில் இருந்து உளவுத் துறை போலீஸாரிடம் ரிப்போர்ட் கேட்கப்பட்டு இருக்கிறது. ‘முன் ஜாமீன் கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா.. இல்லை என்றால் திங்கள் கிழமை நீதிமன்ற தீர்ப்பு வந்ததும் கமலை கைது செய்யலாம். அப்படி செய்தால் என்னவெல்லாம் பிரச்சினை வரும்?’ என்றுதான் உளவுத் துறை போலீஸாரிடம் விசாரித்து இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

உளவுத்துறை போலீஸாரோ, ‘ஜாமீன் கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகப்படியாக இருக்கிறது. அவர் ஜாமீன் கேட்ட நேரத்தில் கைது நடவடிக்கை என போனால் அது அரசுக்கு கெட்ட பெயரை உண்டாக்கும். ஜாமீன் கிடைக்காத பட்சத்தில் தாராளமாக கைது செய்யலாம். பெரிய பிரச்சினை எதுவும் வராது. எதிர்க்கட்சிகள் கமலுக்காக பேசுவார்கள்.ஆனால் ஜெயலலிதாவுக்கு பிறகு ஒரு தைரியமான முடிவு என மக்கள் மத்தியில் ஆட்சிக்கு நல்ல பெயர்தான் உண்டாகும். அதனால் கைது செய்வதில் தப்பில்லை’ என்று சொல்லி இருக்கிறார்கள்.

இதற்கிடையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு கடுமையான விமர்சனத்துக்குள்ளானது. இந்துவை தீவிரவாதி என சொன்ன கமல் நாக்கை வெட்ட வேண்டும் என்று ராஜேந்திர பாலாஜி பேசியிருந்தார். அமைச்சர்கள் தரப்பில் இருந்தோ முதல்வர் தரப்பில் இருந்தோ இந்த பேச்சுக்கு எந்த ரியாக்‌ஷனும் வரவில்லை. ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு பொறுப்பாளராக இருந்த ராஜேந்திர பாலாஜியிடம் கள நிலவரம் விசாரிப்பதற்காக முதல்வர் எடப்பாடி பேசியிருக்கிறார். அப்போது கள நிலவரம் பற்றி பேசிவிட்டு, ‘கமல் பற்றி நீங்க பேசியதுதான் ஊரெல்லாம் பேச்சா இருக்கு. நீங்க சரியாத்தான் பேசி இருக்கீங்க. அதுல இருந்து பின்வாங்க வேண்டாம். எது வந்தாலும் பார்த்துக்கலாம். நீங்க சொன்ன கருத்துல உறுதியா இருங்க. மக்கள்கிட்ட அதுக்கு நல்ல வரவேற்பு இருக்கு..’ என்று சொன்னாராம். அதைக் கேட்டு ராஜேந்திர பாலாஜி உற்சாக பாலாஜி ஆகிவிட்டாராம். டிவி சேனல்களில் எல்லாம் தொடர்ந்து கமலை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார் பாலாஜி. அதேபோல, அமைச்சரின் பேச்சுக்கு டெல்லியில் இருந்தும் வரவேற்பாம். பிஜேபி பிரமுகர்கள் சிலர் போன் போட்டு ராஜேந்திர பாலாஜிக்கு வாழ்த்து சொல்லியிருக்கிறார்கள். ” என்று முடிந்தது அந்த மெசேஜ்.

அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக். தொடர்ந்து ஸ்டேட்டஸ் ஒன்றையும் பதிவிட்டது.

” தேனி குச்சனூர் பகுதியிலுள்ள காசி ஸ்ரீஅன்னபூரணி கோயிலில், தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் பெயரை தேனி மக்களவை உறுப்பினர் எனக் குறிப்பி்ட்டு கல்வெட்டு வைக்கப்பட்டது. கல்வெட்டு படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகப் பதறிப்போனார் ரவீந்திரநாத் குமார்.

‘குச்சனூர் காசி ஸ்ரீ அன்னபூரணி ஆலய கல்வெட்டு விவகாரம் நேற்று எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இந்த நிகழ்வு மிகவும் கண்டிக்கத்தக்கது.தேர்தல் முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது மிகவும் தவறானது.மேலும் எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று அறிக்கை விட்டார். அத்துடன் காவல் நிலையத்திலும் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில்தான் கோயில் நிர்வாகியான வேல்முருகன் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

கைது செய்யப்பட்ட வேல்முருகன் காவல் துறையில் பணியாற்றியவர். கோயில் கும்பாபிஷேகத்துக்காக ஓ.பி.எஸ். மனைவியை சந்தித்து டொனேஷன் வாங்கி இருக்கிறார். ஓ.பி.எஸ். மனைவியும் நிதியை அள்ளிக் கொடுத்திருக்கிறார். அதில் மகிழ்ந்து போன வேல்முருகன், ஓ.பி.எஸ். குடும்பத்தை சந்தோஷப்படுத்த வேண்டும் என்று யோசித்து இருக்கிறார். அதில் அவருக்கு கிடைத்த ஐடியாதான் கல்வெட்டில் தேனி எம்.பி. என போடுவது. கல்வெட்டை செதுக்கியவர் கேட்டபோது, ‘ அவரு இதைப் பார்த்தால் சந்தோஷப்படுவாரு.’ என்று சொன்னாராம் வேல்முருகன். அதே நேரத்தில் எடப்பாடி பெயரும் கல்வெட்டில் வரக் கூடாது என்பதை கவனமாக பார்த்து இருக்கிறார் வேல்முருகன். அதனால்தான் முதல்வர் என்பதில் ஜெயலலிதா என்று குறிப்பிட்டு இருக்கிறார். எடப்பாடி பெயர் வந்தால் ஓ.பி.எஸ். குடும்பம் சந்தோஷப்படாது என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார் வேல்முருகன். ” என்று முடிந்தது ஸ்டேட்டஸ். அதற்கு லைக் போட்டுவிட்டு ஆஃப்லைனில் போனது வாட்ஸ் அப்.

.

.

**

மேலும் படிக்க

**

.

**

[விமர்சனம்: மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/7)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: கெஞ்சல், மிரட்டல்- கமல் வெளியிடாத ரகசியத் தகவல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/84)

**

.

**

[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/53)

**

.

**

[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/27)

**

.

**

[மோடி காய்ச்சல்: சந்திரபாபு நாயுடு பரபரப்பு!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/52)

**

.

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share