மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டது வாட்ஸ் அப்பில் ஒரு சில காட்சிகளும் பிறகு செய்தியும் வந்து விழுந்தது.
“ஆரம்பகால தமிழ்நாட்டு அரசியலில் எழுத்தும் பேச்சும் மேலோங்கி இருந்தன. போகப்போக எழுத்திலும் பேச்சிலும் நாகரீகம் குறைந்து பேச்சு நாக்கு வியாபாரமாகவும் எழுத்து வார்த்தை வியாபாரமாகவும் அரசியலில் ஆகிப்போனது. அந்த நிலையின் உச்சமாக இன்று தமிழ்நாட்டு அரசியலில் வாட்ஸ் அப் ஆடியோ க்களும் வாட்ஸ் அப் வீடியோக்களும் தான் ஆக்கிரமிப்பு செய்திருக்கின்றன.
சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்கள் முழுவதும் ஒரு சில நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த வீடியோ வேகமாக பரவியது. ஒரு இளம் பெண்ணோடு அந்த வீடியோவில் இருக்கக்கூடியவர் பிரபல அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் என்று தகவல்கள் பரவின. இதை நாஞ்சில் சம்பத் கடுமையாக மறுத்தார். அந்த வீடியோவில் இடம் பெற்றது தான் அல்ல என்றும் விஷமிகளின் வேலை என்றும் நாஞ்சில் சம்பத் இதற்கு விளக்கம் கொடுத்தார்..
அதே நேரம் அந்த வீடியோவில் இருப்பது ஒரு அரசியல்வாதி தான் என்றும் அந்த அரசியல்வாதிக்கு பணிவிடை செய்யும் அந்தப் பெண்ணும் ஒரு அரசியல்வாதி தான் என்றும் அரசியல் வட்டாரத்தில் அனைவரும் உறுதியாகக் கூறுகிறார்கள். சமீப வருடங்களாக தனக்குப் பிடிக்காத அரசியல் எதிரிகளை பழி வாங்குவதற்கும் அவர்களை அம்பலப்படுத்துவதற்கும் அல்லது அவர்களது அரசியல் செல்வாக்கை அடியோடு அழிப்பதற்கும் இப்படிப்பட்ட ஆடியோ, வீடியோ ஆயுதங்கள் எந்தவித தடையுமின்றி ஏவப்படுகின்றன என்பதுதான் உண்மை.
சில நாட்களுக்கு முன்பு வைரலான அந்த வீடியோவின் ஒரு சில நிமிடங்கள்தான் பார்வையாளர்களுக்கு வந்துள்ளது. ஆனால் அந்த வீடியோவின் மொத்த நீளம் சுமார் 58 நிமிடங்கள் என்கிறார்கள். அந்த அரசியல்வாதியின் வீட்டில் அந்தப் பெண் அரசியல்வாதி பேசிக் கொண்டிருக்கும் காட்சிகளும் அதற்குப் பிறகான காட்சிகளும் அந்த வீடியோவில் முழுமையாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதை இப்போது வெளியிட வேண்டிய அவசியம் என்ன? அந்த வீடியோவில் இருக்கும் பெண்ணை பழிவாங்க அவருக்குப் போட்டியாக அதே கட்சியில் இருக்கும் இன்னொரு பெண் திட்டமிட்டிருக்கிறார் என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.
அந்த இரு பெண்களுமே ஏற்கனவே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்தவர்கள். பிறகு ஒருவர் பின் ஒருவராக அதிமுகவுக்கு வந்தார்கள்.
வந்த இடத்தில் ஒருவரை ஒருவர் பின் தள்ளி முன்னேறிக்கொண்டு இருக்கிறார்கள். அதற்கான ஆயுதமாகத் தான் இப்போது ஒரு பெண்ணை வீழ்த்த எப்படியோ இந்த வீடியோவை கையில் எடுத்து இன்னொரு பெண் வெளியிட்டு இருக்கிறார் என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.
இந்த இரு பெண்களின் போட்டி அரசியலுக்குள் சிக்கி அந்த ஆண் அரசியல்வாதியின் அந்தரங்கம் அம்பலத்துக்கு வந்துவிட்டது. யாரை அம்பலப்படுத்த வேண்டும் என வீடியோ வெளியிடப்பட்டதோ அவர் பெயர் வைரல் ஆகாமல் அந்த ஆண் அரசியல்வாதியின் பிம்பம்தான் சிதைக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.
அறிக்கை கொடுத்தால் அதை மறுத்து அதற்கு பதில் அறிக்கை கொடுப்பது தான் தமிழ்நாட்டு அரசியலில் வழக்கம். ஆனால் இப்போது அறிக்கை அரசியல் போய் ஆடியோ அரசியலும் வீடியோ அரசியலும் தமிழகத்தை ஆக்கிரமித்திருக்கின்றன. நவீன தொழில்நுட்பத்தில் நாகரீகத்தை இழந்து நிற்கும் தமிழ்நாட்டு அரசியலில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் சீனியர் அரசியல்வாதிகள்” என்ற மெசேஜ் க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ்அப்.�,