டிஜிட்டல் திண்ணை : அமைச்சரவையில் மாற்றம்! டிஸ்கசனில் சசிகலா!

public

மொபைல் டேட்டா ஆன் செய்தோம். வாட்ஸ் அப்பில் ஏராளமான புத்தாண்டு வாழ்த்து மெசேஜ்கள் குவிந்திருந்தது. அதற்கிடையே ஒளிந்திருந்தது இந்த மெசேஜ். ”புத்தாண்டு வாழ்த்துச் சொல்ல கொங்கு மண்டலத்தில் உள்ள பெரும்பாலான அதிமுக எம்.எல்.ஏ-க்கள் மன்னார்குடிக்குப் போயிருக்கிறார்கள். மன்னார்குடி அருகே உள்ள சுந்தரக்கோட்டைதான் சசிகலாவின் சகோதரர் திவாகரனின் சொந்த ஊர். இன்று புத்தாண்டு தினத்தில் அவர் சொந்த ஊரில்தான் இருந்திருக்கிறார்.

மத்திய மண்டலத்தில் இருக்கும் எம்.எல்.ஏ-க்கள் கூட யாரும் அதிகம் அங்கே போகாத நிலையில் கொங்கு மண்டலத்து எம்.எல்.ஏ-க்கள் எல்லாம் இன்று காலை வரிசை கட்டி சுந்தரக்கோட்டைக்குப் போனார்களாம். அங்கே திவாகரனுக்கு வரிசையில் நின்று இனிப்பும், பரிசு பொருட்களையும் கொடுத்து வாழ்த்துச் சொல்லி இருக்கிறார்கள் எம்.எல்.ஏ-க்கள். அவரும் எம்.எல்.ஏ-க்களின் அன்பை ஏற்று எல்லோருக்கும் வாழ்த்துச் சொல்லி அனுப்பி இருக்கிறார். ‘நான் ஆரம்பத்துல இருந்தே சின்னம்மா ஆதரவாளர் தான். சின்னம்மா சொன்ன எதையும் நான் தட்டினதே இல்லை. சின்னம்மா பொறுப்புக்கு வந்தது ரொம்ப சந்தோஷம். எப்பவும் நான் சின்னம்மாவுக்கு விசுவாசத்தைக் காட்டுவேன்’ என்றெல்லாம் உருகி இருக்கிறார் ஒரு எம்.எல்.ஏ. யார் சொன்னதுக்கும் எந்த ரியாக்‌ஷனும் காட்டாமல் சிரித்துக் கொண்டே ஹேப்பி நியூ இயர் என மட்டும் சொல்லி இருக்கிறார் திவாகரன். என்று முடிந்தது அந்த மெசேஜ்.

தொடர்ந்து அடுத்த மெசேஜ் தேடினோம். வந்து குவிந்திருந்த வாழ்த்துக்களுக்கு இடையில் அதை தேடிக் கண்டுபிடிப்பது சவாலாகவே இருந்தது. ” தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச் செயலாளராகயிருந்த ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். சரியாக பத்து வாரம், ஐந்து நாள், ஆனால் சிகிச்சை பலன் இல்லாமல், 2016 டிசம்பர் 5-ஆம் தேதி காலமானார்,

கடந்த மூன்று மாதமாக தமிழக அரசு முடங்கிபோய் உள்ளது. தற்காலிக முதல்வராக ஓ.பன்னீர்செல்வத்தை நியமித்திருந்தாலும், சுயமாக எந்த திட்டத்தையும் செயல்படுத்தமுடியவில்லை, காரணம், முதல்வர் பதவியை சசிகலாவுக்கு விட்டுக் கொடுக்கும் மனநிலைக்கு முழுமையாக வந்துவிட்டார் என்பதற்கு சான்றாகத்தான், நேற்று சசிகலா பொதுச்செயலாளர் பதவியேற்பு விழாவில், தான் தமிழக முதல்வர் என்ற நிலையை மறந்து சசிகலா காலில் விழுந்து சரணாகதியானது.

சசிகலா மிக விரைவில் முதல்வராக பதவியேற்க உள்ளார், கடந்த சில நாட்களாக கார்டனில் நிர்வாகத்தை பற்றி தீவிரமாக யோசித்து ஆராய்ந்துள்ளார். மக்கள் அதிருப்தியுள்ள அமைச்சர்கள் யார், கட்சியினர்களிடம் சரியான தொடர்பு இல்லாத வெறுப்புகளை சம்பாதித்துள்ள மாவட்டச் செயலாளர்கள், மந்திரிகள் யார், யார் என்ற விபரங்களை சேகரித்து வருகிறார்,

தீபாவுக்கு ஆதரவு அதிகமான மாவட்டம் எது, அந்த மாவட்டத்தில் தீபா பிரச்னையை முறியடிக்க செய்ய தவறியவர்கள் பட்டியல் எடுக்கப்பட்டுள்ளது. சசிகலா முதல்வராக பதவியேற்கும்போது, தன்னோட மந்திரி சபையில் யார், யார் இருக்கவேண்டும் என்ற குறிப்பும் எடுத்து வைத்துள்ளாராம். அதனால் சில மாஜிகள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள். சிட்டிங் அமைச்சர்கள் சிலர் கிலியில் உள்ளனர் பதவி பறிபோகும் பயத்தில்.

சொத்துக் குவிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருந்து வருகிறது, அதனால் வழக்கு தீர்ப்புத் தன்மையைப் பார்த்துக்கொண்டு முதல்வர் பதவி ஏற்கலாமா, அல்லது முதல்வர் பதவியேற்றுக் கொண்டு வழக்கை சந்திக்கலாமா என்ற தீவிரமான ஆலோசனைக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கு, சாதகமான சூழலில் இருப்பதாக நம்பிக்கையில் இருக்கும் சசிகலா, முதல்வர் பதவி ஏற்கும் முடிவுக்கு வந்துவிட்டாராம்.

ஜெயலலிதாவுடன் சசிகலாவை பலகாலமாக பார்த்து வந்தவர் சொல்கிறார்” சசிகலா நல்ல அரசியல் செய்வார், நிர்வாகத்தையும் நன்றாக கவனிப்பார், ஆனால் ஜெயலலிதா சில நேரங்களில் மன்னிப்பார், மறப்பார். அந்த விஷயத்தில் சசிகலா எதிர்மாறாக இருப்பார் என்று அஞ்சுகிறார்கள் அதிகாரிகளும்,கார்டனில் உள்ளவர்களும்.” என்பதான் அவர் சொன்ன அந்த மெசேஜ். அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்துவிட்டு சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *