டிஜிட்டல் திண்ணை: அதிமுக கூட்டணி தொகுதிப் பட்டியல்!

Published On:

| By Balaji

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.

“அதிமுகவில் கூட்டணி பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துவிட்டது. இன்று மாலை அதிமுக தலைமை அலுவலகத்தில் அனைத்துக் கூட்டணிக் கட்சிகளும் கூடி விறுவிறு ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதிமுக கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிகளிடமும் உங்களுக்கு விருப்பமான தொகுதிகளின் லிஸ்ட் கொடுங்க என கேட்டு வாங்கி இருக்கிறார்கள். உதாரணத்துக்கு தேமுதிகவுக்கு 4 சீட் என்றால் 10 தொகுதிகளின் பெயர்களை கேட்டு வாங்கியிருக்கிறார்கள். அதிலிருந்து 4 தொகுதிகளை முடிவு செய்திருக்கிறது அதிமுக. இன்று புதன் கிழமை என்பதால் நல்ல நேரமான புதன் ஓரை இரவு 8மணி முதல் 9 மணிக்குள் வருகிறது, அந்த நேரத்தில் தொகுதிப் பட்டியல் வரலாம் என்கிறார்கள் ஜோதிடத்தில் நம்பிக்கை மிகுந்த அதிமுகவினர். எந்த நேரத்திலும் தொகுதி பங்கீட்டு விபரங்களை அதிமுக தரப்பில் இருந்து எதிர்பார்க்கலாம்.

ஆலோசனைக் கூட்டத்துக்குச் செல்லும் முன்பு முதல்வர் எடப்பாடியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் அமர்ந்து தயார் செய்த பட்டியல்தான் பின் வரும் பட்டியல். இதில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தாலும் அது இன்று மாலை நடக்கும் ஆலோசனைக்குப் பின்னர் செய்யப்படும் மாற்றமாக இருக்கும் என்பதே இப்போதைய நிலவரம்.

அதிமுக போட்டியிடும் தொகுதிகள்…

1.திருவள்ளூர் (தனி)

2. தென் சென்னை

3. மத்திய சென்னை

4. ஸ்ரீபெரும்புதூர்

5. காஞ்சிபுரம் (தனி)

6. கிருஷ்ணகிரி

7. திருவண்ணாமலை

8. தேனி

9. சேலம் (அல்லது) சிதம்பரம்

10. நாமக்கல்

11. ஈரோடு

12. திருப்பூர்

13. பொள்ளாச்சி

14. கரூர்

15. பெரம்பலூர்

16. நாகப்பட்டினம் (தனி)

17. திருநெல்வேலி

18. ராமநாதபுரம்

19.மதுரை

20. தஞ்சாவூர்

பா.ம.க.

1. தர்மபுரி

2.அரக்கோணம்

3.கடலூர்

4. திண்டுக்கல்

5. விழுப்புரம் (தனி)

6. ஆரணி

7. சிதம்பரம் -தனி(அல்லது)சேலம்

பா.ஜ.க.

1.கன்னியாகுமரி

2.தூத்துக்குடி

3.சிவகங்கை

4.கோவை

5. நீலகிரி (தனி)

தேமுதிக

1. கள்ளக்குறிச்சி

2. திருச்சி

3.விருதுநகர்

4. வடசென்னை

புதிய நீதிக்கட்சி

வேலூர்

புதிய தமிழகம்

தென்காசி (தனி)

த.மா.கா.

மயிலாடுதுறை

என்.ஆர்.காங்கிரஸ்

புதுவை

இந்த பட்டியலைதான் அதிமுக ஃபைனல் செய்து வைத்திருக்கிறது. ஆனால், தேமுதிகவை பொறுத்தவரை மதுரை தொகுதியை கேட்டு அடம்பிடித்துக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம், திருப்பூரை கேட்டு பாஜகவும் அழுத்தம் கொடுக்கிறதாம். பாமக தனக்கு சேலம் தொகுதி வேண்டும் என்று இன்றைய ஆலோசனை வரை வலியுறுத்தியிருக்கிறது. ஆனால் அதிமுகவோ முதல்வரின் சொந்த மாவட்டம் என்பதால் சேலத்தை பாமகவிடம் கொடுக்க மறுத்து, சிதம்பரத்தில் போட்டியிடச் சொல்கிறது. அதாவது திருமாவளவனை எதிர்த்து பாமகவை நிறுத்தப் பார்க்கிறது அதிமுக. இவ்வாறான கடைசி நேர மாற்றங்களுக்கு உட்பட்டு வெளியாகிறது இந்த பட்டியல்” என்ற மெசேஜ்க்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப்லைனில் போனது வாட்ஸ் அப்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share