பாதுகாப்பு மற்றும் தேச விரோத நடவடிக்கைகள் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்கவில்லையென்றால் டிக்டாக் செயலியை இந்தியாவில் நிறுத்திவிடுவதாக மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
15 விநாடிகள் அடங்கிய வீடியோ பகிர்வு செயலியான டிக்டாக் இந்தியாவிலும் மிகவும் பிரபலமாகிவிட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் இருந்தாலும் அதைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீனாவைச் சேர்ந்த இச்செயலியால் இந்தியாவில் பணியிடங்களில் வேலைநேரங்களில் வீடியோக்கள் செய்வதாகவும், அரசுக்கு எதிரான மனப்பாங்கை மக்களிடையே ஏற்படுத்துவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. தேச விரோத நடவடிக்கைகள் இந்த டிக்டாக் செயலியால் ஊக்குவிக்கப்படுவதாக ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் ஒரு அங்கமான சுதேசி ஜாக்ரான் மஞ்ச் அமைப்பு பிரதமர் நரேந்திர மோடியிடம் புகார் வழங்கியது. ஹலோ செயலி மீதும் இதுபோன்ற புகார்கள் எழுந்துள்ளன.
இதைத் தொடர்ந்து டிக்டாக் மற்றும் ஹலோ செயலி நிர்வாகத்துக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸில் இவ்விரண்டு செயலிகளும் தேச விரோதச் செயல்களை ஊக்குவிக்கும் மையமாகத் திகழ்வதாகவும், இந்தியப் பயனாளர்களின் தரவு விவரங்கள் எதுவும் வெளிநாட்டு அமைப்புகளுக்கோ, தனியார் துறையினருக்கோ, அந்நிய நாட்டின் அரசுகளுக்கோ அனுப்பப்படக் கூடாது என்ற உத்தரவாதத்தை வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பயனாளர்கள் பாதுகாப்பு தொடர்பான கேள்விக்கு உரிய பதிலையும் விளக்கத்தையும் அளிக்காவிட்டால் இச்செயலிகள் நிறுத்தப்படும் எனவும் அரசு எச்சரித்துள்ளது.
டிக்டாக் மற்றும் ஹலோ செயலிகள் இதுதொடர்பாக இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், இந்தியாவில் தொழில்நுட்ப உள்கட்டுமான வசதிகளை மேம்படுத்தி வருவதாகவும், அதற்காக 1 பில்லியன் டாலர் வரையில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு முதலீடு செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளன. இச்செயலிகளில் 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான பதிவுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த வயது வரம்பை 18 ஆக உயர்த்த வேண்டும் எனவும் இந்தியா கேட்டுள்ளது.
**
மேலும் படிக்க
**
**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**
**[அத்திவரதர்: வரிச்சியூர் செல்வத்துக்கு பாஸ் கொடுத்தது யார்?](https://minnambalam.com/k/2019/07/18/54)**
**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**
**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**
**[டிஜிட்டல் திண்ணை: கிராம சபைகளைக் குறிவைக்கும் சூர்யா](https://minnambalam.com/k/2019/07/17/80)**
�,”