மருத்துவர்கள் எனக் கூறும் பிசியோதெரபிஸ்ட்டுகள் மீது புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கக் காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிசியோதெரபிஸ்ட்கள் தங்கள் பெயருக்கு முன் டாக்டர் எனப் பயன்படுத்தத் தடை விதித்து 2008ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
இந்நிலையில், தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. அதில், பிசியோதெரபிஸ்ட் படித்தவர்கள் தங்களை மருத்துவர்கள் என்று கூறி சிகிச்சை அளிப்பதாகவும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று (மார்ச் 24) நீதிபதி கல்யாண சுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மருத்துவர்கள் என்று கூறிக்கொள்ளும் பிசியோதெரபிஸ்ட்கள் குறித்து புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்த நீதிபதி, குறிப்பிட்ட நபர் மீது புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறைக்கு உத்தரவிட்டார்.�,