“வெயிலு ரொம்ப ஓவரா இருக்குதுல.. இந்த எலெக்ஷன்ல எந்த கட்சியாவது இலவசமா ஏசி கொடுக்குறதா சொல்லிருந்தா நான் அவங்களுக்குதான் ஓட்டு போட்டுருப்பேன்” அப்படின்னு டீக்கடையில ஒரு தம்பி சொன்னாப்ள. அப்ப தான் ஸ்ட்ரைக் ஆச்சு. இவரை எங்கேயோ பார்த்துருக்கோமே அப்படின்னு… அடேய் நீ தான இலவசமா கொடுத்த ஃபேனை தூக்கி நெருப்புல போட்டவன் அப்படின்னு கேட்டேன். அட ஆமான்னேன் ஒரு வேகத்துல நாலு லைக்ஸ் கிடைக்குமேங்குற நப்பாசையில அன்னைக்கு போட்டுட்டேன். இப்ப விசிறியை வைச்சு வீசிகிட்டே இராத்தூக்கம் போச்சுன்னேங்குறான். என்ன சொல்றது இவங்கள? அப்டேட்டை பாருங்க, எலெக்ஷன் ரிசல்ட் வந்து ஒரு வாரம் ஆகப் போகுது.. இன்னும் அன்புமணியை மட்டும் நம்ம ஆளுங்க டிஸ்சார்ஜ் பண்ண மாட்டிக்காங்க. என்ன காரணம்னு கேட்டுட்டு வாரேன்.
**@indupriya911**
அடிக்கற வெயிலுக்கும் இருக்கற பிரச்சினைக்கும் பேசாம டோலக்பூர் ல போய் செட்டில் ஆயிடலாமான்னு யோசனையா இருக்கு ..
**@Kozhiyaar**
திருமணம் ஆகும் வரை தான் அண்ணன்!
அதற்கு பிறகு ‘அண்ணி’யன்!!
**@kumarfaculty**
சூரியனுக்கு அருகில் இருக்கும் கோள் புதன் என்பது இயற்கை அமைந்தது.புதனை மாற்றி பூமியை வைக்க எல்லா முயற்சிகளையும் மனிதச் சமூகம் செய்து கொண்டிருக்கிறது
**@shivaas_twitz**
மதுரையில எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டின மாதிரி, 2021 ச.ம தேர்தலுக்கு முன்னாடி கோதாவரி தமிழகத்துக்கு வருதுன்னு ஒரு பூஜையை போட்டா
– காவேரி பிரச்னையை மடை மாத்துன மாதிரியும் ஆச்சு
– தமிழகத்து மேல கரிசனம் காட்டுன மாதிரியும் ஆச்சு
– நதிநீர் இணைப்பு நாயகனையும் உள்ள இழுத்து போட்டுக்கலாம்
**@kumarfaculty**
டிவி ரிமோட், மொபைல் நம்மிடம் இருக்கும் போது குடும்பத்தினர் யாராவது நம்மிடம் வந்தால் அவற்றை எடுக்கத்தான் வருகிறார்களோ என்று பாதுகாக்கும் முயற்சி அனிச்சைச் செயலாகி விட்டது…!!!
**@oorkkavalaan**
இவரு பிஸ்னஸ் செய்ய லோன் கேட்டா தரமாட்டாராம்…
ஆனா பிஸ்னஸ் செஞ்சி பெரிய ஆளாகிட்டா ரெய்டுக்கு மட்டும் வருவாரம்
**@idumbaikarthi**
பெரியார் மண்ணெல்லாம் இங்கிருக்கிறது. ஆற்றில்தான் மண்ணில்லை.
**@nandhu_twitts**
ஒரு வாய் சாப்டு போ.. Is a word..
எவ்ளோ போட்டாலும் பத்தாதா..?? Is a emotion..!!
**@amuduarattai**
அப்பாவிடம் நன்றாக அடிவாங்கிய தினங்களில், குழந்தைகளுக்கு ஏதேனும் தின்பண்டங்கள் உறுதியாக கிடைக்கும்.
**@yaar_ni**
உலக வரிசையில் இந்தியா இழந்த இடத்தை மீண்டும் பிடிக்கும் ஆண்டுகளாக அடுத்த ஐந்தாண்டுகள் அமையும்: பிரதமர் மோடி
கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சியை கண்டு உலக நாடுகள் வியக்கிறது சொன்னது எல்லாம் பொய்யா கோபால்
**@parveenyunus**
ஆந்திராவில் முழுமதுவிலக்கு – ஜெகன் அதிரடி # ‘சியர்ஸ்’ சொல்றவங்க கண்ணுல ‘டியர்ஸ்’ வரவழைச்சிட்டீங்களே..?
**@saravananucfc**
அதிக பந்துகள் வரும் திசையில் நல்லா ஃபீல்டிங் பண்றவங்கள தான் நிறுத்துவாங்க, பிரச்சனைகளையும் அப்படியே நினைத்து கடவுள் நம்மள தான் நம்பி நிறுத்தியிருக்கிறார்னு நாம் தான் தடுத்து தடுத்து ஜெயிக்க பார்க்கனும்.
**@manipmp**
முடி வெட்டியவுடன் கண்ணாடி பார்ப்பது.,
“காதலுக்கு ஓகே சொன்ன காதலியைப் பார்ப்பது போல” சுவாரஸ்யமானது!
**@Thaadikkaran**
புது போன் வாங்கணும்னு முடிவு பண்ணிட்டா பழைய போன் தானாகவே ரிப்பேர் ஆவது போல் தோன்றுவது டிசைன்..!
**@Suyanalavaathi**
“அடுத்த 5 ஆண்டுகளில் எந்தத் திட்டமும் தமிழகத்துக்கு கிடைக்காது” – பிரேமலதா #
பாஜக கூட கூட்டணி வைத்துவிட்டு பாஜக ஒன்னும் செய்யாது னு சொல்லுறதுக்கு ஒரு தைரியம் வேணும் !!
**@parveenyunus**
தேர்தல் முடிவுகளால் தமிழகம் தனிமைபடுத்தப்பட்டுள்ளது-டாக்டர் கிருஷ்ணசாமி # சரியா சொல்லுங்க.. தமிழகமா, இல்ல உங்க புதிய தமிழகமா..?
**@HAJAMYDEENNKS**
பாஜக தலைவர் பதவியை விட்டு நீக்கினால் தமிழிசையை விட அதிகம் கவலைப்படுவது மீம்ஸ் கிரியேட்டர்களாகத்தான் இருக்கும் !
**@RahimGazzali**
இளையராஜாவை ‘இசை’ கடவுளாக பலரும் நினைக்கிறார்கள். அவர் என்னவென்றால் ‘வசை’ கடவுளாக மாறிக்கொண்டிருக்கிறார்.
**@Kozhiyaar**
மனம் புத்துணர்ச்சி அடைய வீட்டில் உள்ள பொருட்களை சற்று மாற்றி வைப்பதே போதுமானதாக இருக்கிறது!!!
**@prabhuiway**
ஜி ஸ்டாண்ட் எடுக்க மறந்துடீங்கனு சேஸ் பண்ணி வந்து சொல்லிட்டு போகும் போது என்றோ செய்த புண்ணியம் இன்று பலன் தந்தது என்ற நினைப்பு வந்து அந்த நாளை இன்னும் positiveஆக அணுக வைக்கும்
**@pachaiperumal23**
வீடு காலிசெய்யும் போதெல்லாம் குழந்தைகள் சுவற்றில் கிறுக்கியதற்கு வீட்டு உரிமையாளர் அட்வான்ஸில் எவ்வளவு கழிப்பாரோ என்ற பயம் ஏற்படுகிறது.
**@sultan_Twitz**
செல்போன் வாங்கித்தராததால் காதலனின் முகத்தில் 52 முறை அறைந்த காதலி – செய்தி #
எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான் ரொம்ப நல்லவனு சொல்லிட்டா போல..?
-லாக் ஆஃப்
�,”