ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு கடன் பட்டு இருக்கு ஏன்? : அப்டேட் குமாரு  

Published On:

| By Balaji

அடுத்த மாசம் பெட்ரோல் விலை 80 ரூபாயை தொடுமா அப்படின்னு விசாரிக்க பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் என் ஒன்றுவிட்ட  சித்தப்பாவுக்கு போன் போட்டு கேட்டா பெட்ரோல் விலையை விட வெங்காய விலை இலட்சத்தை தொடுமா அப்படின்னு அவர்  கேட்கிறார். சரி இப்ப பப்ளிக் தான் இப்படி இருக்காங்கன்னு அமைச்சரருங்க என்ன பண்றாங்கன்னு பார்த்தா நம்ம ராஜேந்திரபாலாஜி யாரையோ வீடியோல கிழி கிழின்னு கிழிக்கிறார். என்னப்பா இப்படி பேசிட்டாரு அப்படின்னு போன் போட்டு ரத்தத்தின் ரத்தங்களை கேட்டா, இவங்க ஒன்னும் பண்ணலைன்னு தான் திமுகவுக்கு ஓட்டு போட்டு எம்பி தேர்தலில் ஜெயிக்க வச்சாங்க. இப்பவும் இவங்க பக்கம் எதுவும் பண்ணாம திமுகவை குறை சொல்லிகிட்டே இருக்காங்க. இப்படியே போனா அமைச்சர்களால் பாதிக்கப்பட்டோர் நல சங்கம் அப்படின்னு ஒன்னு ஸ்டார்ட் பண்ண வேண்டியதுதான். மறைந்த முன்னாள் முதல்வர் இதயதெய்வம் புரட்சித்தலைவி ஜெயலலிதா இவங்களை எல்லாம் கண்ட்ரோல் பண்ணதால தான் அமைச்சர்களால் ஷைன் பண்ண முடியல அப்படின்னு யாரோ சொன்னதை கேட்ட ஞாபகம் இருக்கு அவங்கள தான் தேடிக்கிட்டு இருக்கேன் கையில கிடைச்சா உக்கார வச்சு நம்ம ராஜு பேசுறதெல்லாம் போட்டு காட்டணும் இதைவிட பெரிய தண்டனை இருக்கவே முடியாது அப்படின்னு சொல்றார். சரி நீங்க அப்டேட்ட படிங்க நான் போய் எதுக்கும் வெங்காய விதை 2 பாக்கெட் வாங்கிட்டு வரேன்.

**டகால்டி ராஸ்கல்**

அடுத்தவன் மனச புண்ணாக்கி சந்தோசபடுறத விட புண்ணாக்கு வித்து சந்தோசமா வாழ்ந்துட்டு போயிடலாம்

**Smiley Azam**

எந்நிலையிலும் சிரித்துக் கொண்டே கடப்பது பக்குவத்தின் அறிக்குறி!!!

**????காவியதலைவி**

நமக்காக யாரும் இல்லை என வருத்தபடுவதை விட ,

#நமக்கானவர்கள் அவர்கள் இல்லை  என கடந்து போய் விடுங்கள்…..????

**நட்சத்திரா**

மச்சான்: சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு ????????

மீ: அதுவா…காஸ்ட்லி சேலைய சீக்கிரம் துவைக்க மாட்டோம்…அதனால இருக்கும் ????????????????

**mohanram.ko**

பத்து ரூபாய் பரிசு பொருளை பார்சல் செய்து கொடுக்க துவங்கியதும், மொய்க் கவர் காண்பது அரிதாகிவிட்டது

**உள்ளூராட்டக்காரன்**

‘யாவரும் கேளிர்’ என்பதை மிகத் தவறாக புரிந்து கொண்டது நம் உறவினர்கள் தான்

‘வேலை கிடைச்சுடுச்சா?’

‘எப்போ கல்யாணம்?’

‘வீட்ல எதுவும் விசேஷம் உண்டா?’

‘எப்போ சொந்த வீடு கட்டப் போற?’

**அ. காண்டீபன்**

தமிழ்மொழிச்

சிறப்பே சிறப்பு..

‘கடுஞ்சொல்’

என விலகாமல்,

சிரமப் பட்டேனும்,

‘தெரிந்து கொள்கிறேன்’ என்பது மிகச் சிறப்பு..

இது ஒரு

புரட்சி!

ஆம்

தமிழின்

விழிப்புணர்ச்சி!..

இனியாயினும்,

பருவம் காத்தோர்,

தமிழுக்கு

உருவம் கொடுக்க

முன்வரட்டும்!..

தமிழை,

அரவணைத்து

வாழவைப்போம்!..

நன்றி!

லாக் ஆஃப்!

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share