கேரளாவில் பாலியல் பலாத்கார சம்பவத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சட்டக்கல்லூரி மாணவி ஜிஷாவின் குடும்பத்தினருக்கு தனது படத்தின் ஒரு பகுதி லாபத்தை வழங்க உள்ளதாக நடிகர் ஜெயராம் அறிவித்துள்ளார். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பெரும்பாவூரைச் சேர்ந்த சட்ட மாணவி ஜிஷா, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சையில் உள்ள ஜிஷாவின் தாய் ராஜேஸ்வரியை நடிகர் ஜெயராம் சந்தித்துப் பேசினார்.
ஜெயராம் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி உள்ள ‘ஆடுபுலியாட்டம்’ திரைப்பட லாபத்தின் ஒரு பகுதியை ஜிஷாவின் தாயாருக்கு வழங்க போவதாக ஜெயராம் அறிவித்துள்ளார். ஜிஷா பள்ளி, கல்லூரியில் படிக்கும்போது பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று, நடிகர் ஜெயராமிடம் பரிசு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கேரள திரையுலகில் தொடர்ந்து பல படங்களின் படைப்பாளிகள், கலைஞர்கள் இதுபோன்று சமூகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.�,