ஜீன்ஸ் அணிந்தால் குழந்தை திருநங்கையாகுமாம்: பேராசிரியர் பேச்சு!

Published On:

| By Balaji

ஜீன்ஸ் அணியும் அல்லது ஆண்கள் போன்று உடை அணியும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தை திருநங்கையாக இருக்கும் மற்றும் அந்தக் குழந்தைக்கு ஆட்டிசம் பாதிப்பு இருக்கும் என பேராசிரியர் ரஜித்குமார் வினோதமான கருத்தை தெரிவித்துள்ளார்.

பெண்கள் அணியும் உடைதான் ஆண்களைத் தவறு செய்ய வைக்கிறது என ஆணாதிக்க சிந்தனை உள்ள சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக பேராசிரியர் ரஜித்குமார் என்பவர் புதிய கோட்பாடு ஒன்றை தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் பேராசிரியர் ஒருவர் பெண்களின் மார்பகங்களை தர்பூசணி பழத்துடன் ஒப்பிட்டுப் பேசிய சம்பவம் பெரிய போராட்டத்துக்குப் பின்பு முடிவுக்குவந்தது.

இந்நிலையில், அரசுக் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் ரஜித்குமார், நிகழ்ச்சி ஒன்றில் சர்ச்சைக்குரிய கருத்தைப் பதிவிட்டுள்ளார். ஜீன்ஸ் அணியும் அல்லது ஆண்கள் போன்று உடை அணியும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தை திருநங்கையாக இருக்கும் மற்றும் அந்தக் குழந்தைக்கு ஆட்டிசம் பாதிப்பு இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

காசர்கோட்டில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேராசிரியர் ரஜித்குமார் பேசியபோது, ஜீன்ஸ் அணியும் அல்லது ஆண்கள் போன்று உடை அணியும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தை திருநங்கையாக இருக்கும்” என்றார். மேலும், ரஜித்குமார் தனது கருத்தை நியாயப்படுத்த வெளிநாட்டுக் குடும்பத்தின் வீடியோவைக் காட்டியுள்ளார்.

இதையடுத்து, வீடியோவை பார்த்தீர்களா அதில், குழந்தைகளின் அம்மா ஜீன்ஸ் அணிகிறார்; அதனால், அவரது குழந்தைகள் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்றெல்லாம் கூறி தனது கருத்தை நியாயப்படுத்த முயன்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அனைத்து அரசு அலுவலகங்களும், ஏஜென்சிகளும் பேராசிரியர் ரஜித்குமாரை, பேசுவதற்கு அழைக்கத் தடை விதித்து, கல்வி அமைச்சர் ஷைலஜா சுற்றிக்கை அனுப்பினார்.

பேராசிரியரின் கருத்துகளுக்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை என அந்த மாநிலத்தின் அறிவியலாளர்களும் மருத்துவர்களும் தெரிவி்த்துள்ளனர்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment