?ஜிஎஸ்டி வசூல் வீழ்ச்சி!

Published On:

| By Balaji

ஜிஎஸ்டி வரி வசூல் ஆகஸ்ட் மாதத்தில் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக ஒன்றிய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டி வரி வசூல் கடந்த ஜூன் மாதத்தில் ரூ.95,610 கோடியாகவும், ஜூலை மாதத்தில் ரூ.96,483 கோடியாகவும் இருந்துள்ளது. ஆனால், ஆகஸ்ட் மாதத்திலோ ரூ.93,960 கோடியாக கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. ஜூலை முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரையில் தாக்கல் செய்யப்பட்ட ஜிஎஸ்டிஆர்-3பி ரிட்டன்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 67 லட்சமாகும். ஜூன் முதல் ஜூலை 31ஆம் தேதி வரையிலான காலத்திலோ 66 லட்சம் ரிட்டன்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்ததாக ஒன்றிய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 31ஆம் தேதியன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கான வரி விகிதங்கள் குறைக்கப்பட்டன. இதனால் அப்பொருட்களின் விற்பனை தாமதமாகியிருக்கலாம் எனவும், அதன் விளைவாக ஜிஎஸ்டி வரி வசூல் வீழ்ச்சியடைந்திருக்கலாம் என்றும் நிதியமைச்சகம் தனது அறிக்கையில் விளக்கமளித்துள்ளது. ஜூலை 27ஆம் தேதி முதல் அந்த வரிக் குறைப்புகள் நடைமுறைக்கு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share