~சோதனைக்குப் பின் இருவர் கைது: என்.ஐ.ஏ நடவடிக்கை!

Published On:

| By Balaji

அல்கொய்தா தீவிரவாத அமைப்புடன் வஹாதத் இஸ்லாம் அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகித்து, கொச்சியில் இருந்து வந்த தேசிய புலனாய்வு முகமையானது எஸ்.பி ராகுல் தலைமையில் நேற்று தமிழகத்தில் நான்கு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை மண்ணடி லிங்கி செட்டி தெருவில் உள்ள வஹாதத் இஸ்லாமிக் ஹிண்ட் என்ற அமைப்பின் அலுவலகத்திலும் பாப்புலர் பிரண்ட்ஸ் ஆஃப் இந்தியா அமைப்புகளின் அலுவலகங்களிலும், புரசைவாக்கத்தில் இஸ்லாமிய அமைப்பின் மாநில தலைவரான முகமது புகாரி என்பவரது வீட்டிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

வஹாதத் இஸ்லாமிக் ஹிண்ட் என்ற இஸ்லாமிய அமைப்பு மத்திய பிரதேசத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. அந்த அமைப்பு அல்கொய்தா அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையிலும் இந்த சோதனையானது நடைபெற்றது. இதுபோல், நாகை மாவட்டம் மஞ்சக்கொல்லை ஹாரிஷ் முகமது, சிக்கலைச் சேர்ந்த அசன் அலி ஆகியோரது வீடு மற்றும் அலுவலகத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

6 மணி நேரத்திற்கும் மேலான நடைபெற்ற இந்த சோதனையில் 9 மொபைல் போன்கள், 15 சிம் கார்டுகள், 7 மெமரி கார்டுகள், 3 லேப்டாப், 6 ஹார்ட் டிஸ்க், 7 பென் டிரைவ்கள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஹாரிஸ் முஹம்மது, அசன் அலி ஆகியோரை நாகை எஸ்.பி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அங்கு நள்ளிரவு வரை வைத்து என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதன் பின்னர் இருவரையும் கைது செய்த அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அவர்களை சென்னை கொண்டு சென்றனர். சென்னையிலும் விசாரணை நடத்திய பிறகு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும், வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்று இந்தியாவில் தாக்குதல் தொடுக்க சதித்திட்டம் தீட்டியதாக அதிகாரிகள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாகை மஞ்சக்கொல்லை பகுதியை சேர்ந்த தௌபிக் என்பவரிடமும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

**

மேலும் படிக்க

**

**[ வேலுமணியா இப்படி? – எடப்பாடி ஆதங்கம்!](https://minnambalam.com/k/2019/07/14/27)**

**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**

**[டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல். ஏ.க்களுக்கு லைஃப் செட்டில்மென்ட்- கூல் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/13/72)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[நிர்வாகிகள் விலகுவதை தடுக்க…சசிகலா போட்ட பட்ஜெட்!](https://minnambalam.com/k/2019/07/13/7)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share