சொடக்கு பாடல்: அனிருத்தின் அதிரடி!

public

சமீப காலமாக தனது ஆஸ்தான பாணி இசையிலிருந்து விலகியிருந்த அனிருத் மீண்டும் அதிரடி காட்டத் தொடங்கியிருக்கிறார். தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கும் ‘சொடக்கு பாடல்’, அது ரிலீஸான அனைத்துத் தளங்களிலும் ட்ரெண்டிங்.

தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம் சூர்யாவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் முக்கியமான ஒன்று. பல ஆண்டுகளுக்குப் பிறகு நார்த் மெட்ராஸ் பின்னணியில் கதை கொண்ட படத்தில் சூர்யா நடித்திருக்கிறார். தனது இயக்குநர் பயணத்தை ஃபாரீனில் தொடங்கிய விக்னேஷ் இரண்டாவது படத்தை பாண்டிச்சேரியில் எடுத்து, இப்போது சென்னைக்குள் நுழைந்திருக்கிறார். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார் என்று தகவல் வெளியானதிலிருந்தே ஏற்பட்ட எதிர்பார்ப்பை ‘சொடக்கு பாடல்’ தீர்த்திருக்கிறது.

இயக்குநராக மட்டுமல்லாமல் பாடலாசிரியராகவும் வெற்றி பெற்றுள்ள விக்னேஷ் இந்தப் பாடலை மணி அமுதவனுடன் இணைந்து எழுதியிருக்கிறார். ஹவுசிங் போர்டு மக்களை எவ்விதத்திலும் முன்னேறவிடாமல் அரசியல் பகடையாக மட்டுமே பயன்படுத்தும் அரசியல்வாதிகளை நோக்கிக் கேள்வியெழுப்பும் பாடலாக, அதேசமயம் பொழுதுபோக்கு கொஞ்சமும் குறையாமல் இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார் அந்தோணி தாசன்.

[சொடக்கு பாடல்](https://www.youtube.com/watch?v=ZVx_ELdttg8)�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *