~‘சைனா செட்’ மூவாயிரம் கோடிப்பூ: அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

இந்த பக்கம் பார்த்தா ஊர் முழுக்க சிலையை காணோம், எல்லாம் போலி சி்லையா இருக்குன்னு சொல்லிட்டு வாராங்க. அந்த பக்கம் போனா உலகத்துலயே பெரிய சிலை இது தான்னு ஸ்வீட் கொடுக்குறாங்க. வழக்கம் போல நாம எந்த பிரச்சினையிலயும் வாயை கொடுத்து மாட்டிக்காம ஓரமா நின்னு வேடிக்கை பார்க்க வேண்டியது தான். ஜெயலலிதாவுக்கு சிலை வச்சதுல இருந்து தான் ஒவ்வொரு சிலையிலயும் மீம்ஸுக்கு கண்டெண்ட் எடுக்கலாம்னு பசங்க தெரிஞ்சுக்க ஆரம்பிச்சாங்க. இப்ப வழக்கம் போல படேல் சிலை வரைக்கும் வந்து நிற்குது. நீங்க எத்தனை கிலோ மீட்டர் உயரத்துலயும் சிலையை வைங்க, எத்தனை லட்சம் கோடியை வேணும்னாலும் செலவு பண்ணுனதா கணக்கு காட்டுங்க, எங்களுக்கு எல்லாமே மூணு நிமிசத்துல முடியுற மீம் மேட்டர் தான்னு இறங்கிட்டாங்க. படேல் சிலைல மொட்டை ராஜேந்திரன் போட்டோவை சேர்த்துல்லாம் போடுறாங்க சார். இது பரவாயில்லை மூவாயிரம் கோடி செலவு பண்ணி சைனா செட்டையா வாங்குனீங்கன்னு வேற கலாய்க்குறாங்க. அப்டேட்டை பாருங்க, சிலையில சிப் இருக்குதாம் என்னன்னு பார்த்துட்டு வாரேன்.

**@ajmalnks**

பட்டேல் சிலையில் மோடி வைத்துள்ள சிப்பானது ஒவ்வொரு விநாடியும் நம்நாட்டின் பாதுகாப்பை கண்காணித்து எதிரிகளின் சூட்சுமத்தை முறியடிக்கும் வகையில் மோடியின் நேரடி கண்காணிப்பில் உருவாக்கப்பட்டது.

அமெரிக்காவே இந்த தொழில்நுட்பத்தை கண்டு அஞ்சுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?-எஸ்.வி.சேகர்

**@ThalaSp_**

சிரிக்கும் போது நான்கு பேர் உன்னுடன் சேர்ந்து சிரிப்பார்கள் ஏனெனில் உலகம் ஜாலியானது

அழும்போது தனியாகத்தான் அழுவாய்… ஏனெனில் உலகம் போலியானது.

**@Giri47436512**

ஆன்லைன் வர்த்தகத்துலயும், கொரியர்லயும் வேலை பார்க்க புத்தகப்பையை சுமந்ததே மிக பெரிய அனுபவம்!!..

**@gips_twitz**

அதாவது ஸ்டேட்டோ சென்ட்ரலோ பாஜக ஆட்சியில

யூனிட்டி என்பது ஒப்புக்கே அதை விளக்கும் விதமாக ஒப்புயூனிட்டி என்ற சொல் மருவி ஒப்பியூனிட்டி ஆனது

**@Thaadikkaran**

தீபாவளிக்கு ட்ரெஸ் எடுக்க கூட சில மணி நேரம் ஆகும் ஆனா தைக்குறதுக்கு குடுத்த சட்டையை டைலரிடம் வாங்க ஒரு யுகமே தேவைப்படும்..!!

**@HAJAMYDEENNKS**

உலகிலேயே அதிகமான ஏழைகள் வாழும் நாடு இந்தியா

3000 கோடி செலவில் உலகிலேயே மிகப்பெரிய சிலை இருக்கும் நாடும் இந்தியாதான் !

**@Aruns212**

எத்தனை ஆயிரங்கள் சம்பாதித்தாலும்,ஒரு கிழிஞ்ச பத்து ரூபாயைத் தள்ளி விடும் போது, கிடைக்கிற சுகமே தனி.

**@HAJAMYDEENNKS**

அம்மா இல்லாததால் மிரட்டி ஆட்சியை பறிக்க பார்க்கிறது திமுக – எடப்பாடி #

மிஸ் மிஸ் என்னை கிள்ளிட்டான் மிஸ் மொமன்ட் !

**@Shan Karuppusamy**

24 மணி நேரம் தள்ளித் தள்ளி வெடிக்கவேண்டிய பட்டாசுகளை எல்லாம் 2 மணி நேரத்துல மொத்தமா வெடிச்சா பாதிப்பு இன்னும் அதிகமா இருக்காதா?

-ஒருடவுட்டு

**@yugarajesh2**

பாஜகவுடன் கூட்டணி வைக்க யாரையும் கெஞ்ச மாட்டோம்- பொன்.ராதா#அதுசரி கூட்டணிக்கு யாரும் வர்றேன்னு சொன்னால் தானே கெஞ்சுறதுக்கு..?

**@rahimgazali**

பட்டேல் சிலை திறந்தாச்சுல்ல… இனி பாருங்க இந்திய பொருளாதாராம் சிலையை மிஞ்சிய உயரத்துக்கு போகப்போகுது.

**@Thaadikkaran**

தீபாவளியன்று தமிழகத்தில் காலை 4 மணி-5 மணி வரை. இரவில் 9மணி-10 மணி வரை பட்டாசு வெடிக்கலாம்

– காலைல சரியா நாலு மணிக்கு வாட்ச்ல பேட்டரியே கழட்டி விட்றனும்.!

**@palanikannan04**

மோடி ஒவ்வொரு நாட்டுக்கும் போய் சிலைகளோட உயரத்தை தெரிஞ்சிக்கிட்டதுக்கு பதிலா,

ஒவ்வொரு நாடும் தங்களோட பண மதிப்பை டாலருக்கு நிகரா எப்டி வீழ்ச்சியடையாம பாத்துக்குறாங்கனு தெரிஞ்சிக்கிட்டு வந்துருக்கலாம்…

**@Thaadikkaran**

உலகம் முழுவதும் விரைவில் ஆவின் பால் பொருட்கள் கொண்டு செல்லப்படும் – ராஜேந்திர பாலாஜி# டூருக்கு கூட்டிட்டு போக சொல்றார் போல.!

**@ajmalnks**

வல்லபாய் பட்டேல் சிலை திறந்ததும் பெட்ரோல்,டீசல் விலையில் பெரும் மாற்றம்.லிட்டருக்கு பெட்ரோல் விலை 30 ரூபாயும்,டீசல் விலை 20 ரூபாயும் உடனே குறைந்து அமலுக்கு வந்தது.

மோடியின் அழிக்க முடியா சாதனை இது என மக்கள் புகழாரம்.

#ஸ்டேட்டுக்கேஒப்பியூனிட்டி

**@ItsJokker**

அப்பாவின் பெயரை, பிள்ளைக்கு வைப்பது எல்லாம் பாசத்தை காட்ட மட்டும் அல்ல,

சில நேரங்களில் கோவத்தை காட்டவும் தான்..!!

**@sultan_Twitz**

பட்டாசுகளை 90 சதவீதத்திற்கு மேல் குழந்தைகள்தான் வெடிப்பார்கள், அவர்கள் மீது சட்டத்தை புகுத்துவீர்களா? – பொன்னார் #

இவங்களே சட்டத்தை போடுவாங்களாம், இவங்களே எதிர்ப்பாங்களாம்..?!

**@Thaadikkaran**

“நீங்கள் என் பெயரில் ஒரு பேஜ் ஆரம்பித்து என் வீடியோக்களை ஷேர் செய்துவந்தால் உங்கள் வாழ்வில் உள்ள பிரச்சனைகள் ஓடிவிடும்”-தோழர் நித்தியானந்தா

– இந்த செய்தியை பத்து பேருக்கு அனுப்பினா நல்ல செய்தி வரும் மொமெண்ட்..!

**@Annaiinpillai**

அம்மா இல்லாததால் மிரட்டி ஆட்சியை பறிக்க பார்க்கிறது திமுக – எடப்பாடி #

# நல்ல வேலை ரொம்ப மிரட்டுனா சின்னம்மாகிட்ட சொல்லுவனு சொல்லாம போனிங்கலே!

**@BS_Prasad**

ஒரு கதை சொல்லட்டுமா சார்.

முதல்ல அது யாரோட கதைன்னு சொல்லுங்க.

-லாக் ஆஃப்

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share