சேலம் மாவட்டத்தில் மழை: ஏற்காடு முழுவதும் மின்தடை

Published On:

| By admin

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக எடப்பாடி, ஏற்காடு, மேட்டூரில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. 3 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. வயல்வெளிகளிலும் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.

ஏற்காட்டில் நேற்றிரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. 3 மணி நேரம் கொட்டிய கனமழையால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது . ஏற்காட்டிற்கு செல்லும் முக்கிய பாதையான அடிவாரத்தில் இருந்து ஏற்காடு செல்லும் சாலையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் ஏற்காடு மலைப்பாதையில் நேற்றிரவு 8 மணி முதல் 11 மணி வரை 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரு புறமும் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. மேலும் மின் கம்பங்கள் மீது மரங்கள் சாய்ந்ததில் மின்கம்பங்கள் உடைந்தும், மின்சார ஒயர்கள் அறுந்தும் சாலையில் விழுந்தது. இதனால் ஏற்காடு முழுவதும் மின்தடை ஏற்றப்பட்டது.

இதே போல ஏற்காட்டில் இருந்து கிராமங்களுக்கு செல்லும் சாலைகளிலும் மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும் வீடுகள் மீதும் மரங்கள் சாய்ந்து விழுந்தன. மலை கிராமங்களுக்கு செல்லும் சாலைகளில் மரங்கள் விழுந்ததால் கிராம மக்கள் ஊருக்கு செல்ல முடியாமல் தவித்தனர். 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் வழியில் மரங்கள் முறிந்து விழுந்ததால் கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதி மக்கள் இன்று காலையும் வாகனங்களில் செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். சாலைகளில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share