மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதன்படி, சேலம் மாவட்டத்தில் பாதுகாப்புத் தொழில் வழித்தடம் அமைக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2018-19ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கையில், நாட்டின் இரண்டு இடங்களில் பாதுகாப்புத் தொழில் வழித்தடம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் ஒரு தொழில் வழித்தடத்தையும், உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு தொழில் வழித்தடத்தையும் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், ஓசூர், சேலம் மற்றும் திருச்சி ஆகிய ஐந்து இடங்களில் இந்தப் பாதுகாப்புத் தொழில் வழித்தடத்தை அமைக்க இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அமையவுள்ள தொழில் வழித்தடங்கள் குறித்து இதுவரை ஆறு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. திருச்சியில் ஜனவரி 20ஆம் தேதி நடத்தப்பட்ட கூட்டத்தில், பாதுகாப்புத் தொழில் வழித்தடத்தில் படைக்கலத் தொழில் வாரியம் / ராணுவ பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில் துறையினர் ரூ.3,100 கோடிக்கு மேல் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளனர். பாதுகாப்புத் தொழில் வழித்தடம் தொடர்பான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க ஆலோசகர் ஒருவரையும் அரசு நியமித்துள்ளதாக ஜூலை 15ஆம் தேதி மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: உதயநிதியை மாசெக்கள் தேடி வரவேண்டும்- அறிவாலயத்தின் மெசேஜ் !](https://minnambalam.com/k/2019/07/15/72)**
**[அதிமுக தலைவராகிறாரா ரஜினி?](https://minnambalam.com/k/2019/07/15/18)**
**[திமுகவில் இணைந்த தேமுதிக மா.செ!](https://minnambalam.com/k/2019/07/14/48)**
**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**
**[ நியூசிலாந்துக்கு ‘விதி’ செய்த ‘சதி’!](https://minnambalam.com/k/2019/07/15/46)**
�,”