செல்லூர் பாய்க்கு வேலை வந்துருச்சே: அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

எப்பவும் எலெக்‌ஷன் ஆரம்பிக்குதுன்னா ஓடி வந்து கண்டண்ட் கொடுக்குறது தேர்தல் ஆணையம் தான். இந்த தடவையும் பெர்ஃபாமன்ஸ்ல இறங்கியிருக்கு. ஆண்டாள் கோயில்ல தாமரை சிற்பம் இருக்குதாம். இது பாஜகவோட சின்னம் ஆச்சேன்னு துணியை வச்சு மறச்சுட்டாங்களாம். என்னம்மா கண்ணு படத்துல போலீஸ் வேடத்துல நடிச்ச வடிவேலு சிகப்பு கலருல எதை பார்த்தாலும் சுடுவாரே அது மாதிரி. உடனே டென்சன் ஆன தமிழிசை அக்கா கை தான காங்கிரஸோட சின்னம்.. அப்ப எல்லார் கையையும் வெட்டிருவீங்களான்னு கேட்ருக்காங்க.. அப்புறம் துணியை வைச்சு சூரியனையும் மறைங்கன்னு சொல்லிருக்காங்களாம். அப்புறம் இந்த மேட்டர் நமக்குள்ளேயே இருக்கட்டும்.. செல்லூர் பாய்க்கு தெரிஞ்சுட வேணாம். தெரிஞ்சுட்டா திமுகவை பிடிக்கிறேன்னு நேரா தன்னோட படையை கூட்டிகிட்டு கன்னியாகுமரில காலையில சூரியன் உதிக்கும் போது தார் பாயை தூக்கிட்டு போயிடுவாரு.. அப்டேட்டை பாருங்க..

**@ShivaP_Offl**

30% வாத்தியார்கிட்டேயும்!

20% மேனஜர்கிட்டேயும்,

40%மனைவிகிட்டேயும்,

மீதி 10% குழந்தைங்ககிட்டேயும்,

திட்டுவாங்கியே காலம்முடியுது

**@SkSoundhar**

பொள்ளாச்சி சம்பவத்தில் 100 பெண்கள் பாதிக்கப்படவில்லை. -கோவை ஆட்சியர். #

அதுக்கும் மேலே தானே.!

**@SkSoundhar**

தமிழகத்தில் குடும்ப அரசியல் தோற்காடிக்கப்பட வேண்டும்.-எச்.ராஜா. #

இந்த விஷயம் ஓபிஎஸ் மகனுக்கு தெரியுமா,.?!

**@ShivaP_Offl**

செல்பி எடுக்க காஸ்ட்லியான துணியை அணிந்துகொள்ள தேவையில்லை,

கழகழவென சிரித்தாலே போதும்…

**@gips_twitz**

தொழில் தொடங்குவதில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது – வெங்கய்ய நாயுடு

தொழில் முடங்குவதில்னு சொல்லுங்க அதான் சரியா இருக்கும்

**@ItsJokker**

சண்டைக்கு பின்பான கோபத்தை “பாத்திர” சத்தத்திலும்,

சமாதானத்திற்கான பின்பான சந்தோசத்தை

“வளையலின் முனகலிலும்” சொல்லி விடுகிறாள்…!!!

#மனைவியதிகாரம்

**@Thaadikkaran**

கல்யாணத்திற்கு முன்னாடி ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’ மோட்ல இருந்தவங்கெல்லாம் கல்யாணத்திற்கு பின் ‘எப்படி இருந்த நான் இப்டி ஆயிட்டேன்’ என்ற மோடுக்கு மாறிட்டாங்க..!!

**@manipmp**

ஒரே மாதிரி உலகத்தில் ஆறுபேர் இருப்பாங்க..அந்த ஆறுபேரும் ஒரே இடத்தில் இருப்பது சீனாவில தான்

**@Vicky_stirring**

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் விருப்பமனு நாளை முதல் பெறப்படும்! –

ஜெ தீபா

விருப்பமனு தீபா அக்கா கொடுக்க அதை மாதவன் பெற்றுக்கொள்வார் அத்துடன் நேர்காணல் இனிதே நிறைவடையும்?!

**@saravananucfc**

கண்ணா மூச்சு விளையாட்டில் ஒளிஞ்சிருக்கிறோம்னு நினைச்சு அதே இடத்தில் கம்முனு பம்முற குழந்தையை கண்டும் காணாதது போல தேடவே ஆசை பிறக்கிறது.

**@Annaiinpillai**

கணவன்மார்கள் ஒவ்வொருவரும் இந்தியன் கிரிக்கெட் டீம் மாதிரி தான் அவுட் ஆப் ஃபார்ம்ல இருக்க மனைவிய தன்னுடைய அன்பால் ஃபார்முக்கு கொண்டு வந்து விடுகிறார்கள்!

**@SubashiniBA**

தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை தலைமை கழகத்தில் பெற்று கொள்ளலாம்…! – ஜெ தீபா

ஆளும்கட்சி,எதிர்கட்சி கதி இனி முடிஞ்சுதுடா…

அந்த கடவுளே வந்தாலும் உங்க யாரையும் இனி காப்பாத்த முடியாது

**@manipmp**

ஒரு கன்னத்தில் பவுடர் போட்டால் மறுகன்னத்தை காட்டுவதில்லை

குழந்தைகள்

**@skpkaruna**

ஆட்டு வியாபாரியிடம் 3.5 லட்சம் பறிமுதலாம்! காய்கறி வியாபாரி, பஞ்சு, நூல் வாங்கப் போறவங்கன்னு வளைச்சு வளைச்சு பிடிக்கிறாங்க. வழக்கம் போல தேர்தலுக்கு முந்தைய நாட்களில் காணாமல் போகப் போகும் இந்தப் பறக்கும்படைகளின் அட்டகாசங்களை இன்னும் ஒரு மாதத்துக்கு வியாபாரிகள் தாங்கியாக வேண்டும்.

**@sultan_Twitz**

இந்திய தபால்துறையில் தமிழகத்தில் 4,442 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பாணை வெளியிடு; 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.! – செய்தி #

ஹிந்திகாரன் நவ்: அரே பையா போஸ்ட் ஆபீஸ் வேணாம் செம்மொழி ஆராய்ச்சியாளர்கள் வேகன்ட் இருந்தா மட்டும் சொல்லு நம்பல்க்கு..?!

**@senthazalravi**

தேர்தல் கூட்டணி வேறு; இயக்கத்தின் லட்சியம் வேறு

– ஜி.கே.வாசன்

அப்ப ? இயக்கத்தின் லட்சியம் என்ன ?

தேர்தல் கூட்டணி வைக்கிறது !!

**@supoagathee**

சிஷ் : குருவே அம்பேத்கர் பெரியார் சிலைகளைக்கூட துணிபோட்டு மூடுறாங்களே ஏன்

குரு : அதுவா தேர்தல் நடத்தைவிதி அமுலுக்கு வந்தாச்சு இல்லையா அதனால் கட்சி சார்பானதை எல்லாம் மூடுறாங்க

சிஷ் : ராமர் ,அனுமாரெல்லாம் பாஜக அஜெண்டா ஆயிடுச்சே அப்படின்னா கோயிலை எல்லாம் மூடிடுவாங்களா

**@karthekarna**

உன்ன நம்பிதான வந்தேன் என்பது கூட ஒரு வாரத்தில் காமெடி டயலாக்காக பயன்படுத்தப்படும் என்பது சமூகவலைதளங்களின் சாபக்கேடு

**@mohanramko**

வாக்கு பதிவு இயந்திரத்தில் மக்கள் கை வைப்பதே,’பைனல் டச்’

-லாக் ஆஃப்�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share