|செலவைக் கூட்டும் உள்கட்டமைப்புத் திட்டங்கள்!

Published On:

| By Balaji

*343 உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குக் கூடுதலாக செலவாகியுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.150 கோடிக்கும் மேல் மதிப்பு கொண்ட உள்கட்டமைப்புத் திட்டங்களை ஒன்றிய புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்க அமைச்சகம் கண்காணித்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்துக்கான அறிக்கையை இந்த அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், “1,332 உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ரூ.16,26,675.52 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அவற்றை முடிப்பதற்கு ரூ.18,49,766.91 கோடி செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரம்பை மீறி கூடுதலாக ரூ.2,23,091.39 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது உண்மையான செலவைவிட 13.71 விழுக்காடு கூடுதலாகும்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த 1,332 திட்டங்களில் 343 திட்டங்களுக்கு வரம்பை மீறி கூடுதலாகச் செலவாகியுள்ளது. மேலும், 253 திட்டங்களை முடிப்பதில் நேரம் தாமதமாகியுள்ளது. இந்த அறிக்கையின்படி, ஏப்ரல் மாதம் வரையில் இத்திட்டங்களுக்கு ஏற்பட்டுள்ள செலவு ரூ.6,63,109.75 கோடியாகும். இது எதிர்பார்க்கப்பட்ட செலவை விட 35.85 விழுக்காடு கூடுதலாகும். உள்கட்டமைப்புத் திட்டங்கள் தாமதமாவதற்கு, நிலம் கையகப்படுத்துதலில் ஏற்படும் தாமதம், வனத் துறையின் அனுமதி பெறுவதற்கு ஏற்படும் தாமதம், இயந்திரம் விநியோகிப்பதில் ஏற்படும் தாமதம், நிதிச் சிக்கல்கள், மாவோயிஸ்ட் ஊடுருவல், சட்ட வழக்குகள், சட்ட ஒழுங்கு நிலை போன்ற காரணங்கள் இந்த அறிக்கையில் காட்டப்பட்டுள்ளன.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share