`சென்னை: 500 எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்!

Published On:

| By Balaji

சென்னைவாசிகளுக்கு ஏதுவாக 50 இடங்களில் 500 எலெக்ட்ரிக் பைக்குகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

சென்னை மாநகராட்சி சார்பாக சைக்கிள் ஷேரிங் திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து சென்னைவாசிகளின் எளிதான பயண அனுபவத்துக்காக, குறிப்பாக முதியோர் மற்றும் பெண்களுக்காக எலெக்ட்ரிக் சைக்கிள் ஷேரிங் திட்டம் தொடங்கப்படவுள்ளது. பேட்டரிகளால் இயங்கும் இந்த பைக்குகள் 45 கிலோமீட்டர் வரையில் பயணிக்கும் வசதியுடன் இருக்கும். இவற்றின் மின்வசதி 70 சதவிகிதம் பேட்டரியிலிருந்தும், 30 சதவிகிதம் பெடலிங் வாயிலாகவும் கிடைக்கும் வகையில் அமைக்கப்படுகிறது.

இன்னும் நான்கு முதல் ஐந்து மாதங்களுக்குள் இத்திட்டம் தொடங்கப்படும் என்று சென்னை பெருநகராட்சி அதிகாரி ஒருவர், *டைம்ஸ் ஆஃப் இந்தியா* ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். அடையாறு, கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், மயிலாப்பூர், பெசன்ட் நகர், அம்பத்தூர் உள்ளிட்ட 50 இடங்களில் இந்த எலெக்ட்ரிக் பைக் சேவை தொடங்கப்படுகிறது. மெட்ரோ ரயில் நிலையம் உள்ளிட்ட மக்கள் புழக்கம் அதிகம் இருக்கும் இடங்களில் இந்த எலெக்ட்ரிக் பைக் சேவை வழங்கப்படவுள்ளது. இந்த பைக்குகளின் பாதுகாப்பு அம்சமாக ஜிபிஎஸ் வசதியும், மொபைல் செயலி வாயிலாக இயக்கும் வசதியும் ஏற்படுத்தப்படுகிறது.

.

.

**

மேலும் படிக்க

**

.

.

.

**

[டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்களா, தொண்டர்களா? முடிவுக்கு வந்த ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/05/27/68)

**

.

**

[அமமுக தோல்விக்கான காரணங்கள்: அறிக்கை அனுப்பிய நிர்வாகிகள்!](https://minnambalam.com/k/2019/05/27/15)

**

.

**

[அதிமுகவில் ராஜ்யசபா ரேஸ்!](https://minnambalam.com/k/2019/05/26/52)

**

.

**

[ரயில்வே இணையமைச்சர் ஆகிறார் ரவீந்திரநாத்?](https://minnambalam.com/k/2019/05/26/55)

**

.

**

[தலித்திய தனிமைப்படுதல் என்னும் அபாயம்!](https://minnambalam.com/k/2019/05/27/17)

**

.

.

.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share