சென்னையில் வெளிநாட்டுப் போதை மாத்திரைகள் விற்பனை!

Published On:

| By Balaji

சென்னையில் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுப் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த நபரை நேற்றிரவு (ஆகஸ்ட்,21) காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவான்மியூர் பேருந்து டிப்போ அருகே நேற்றிரவு ஒரு காரை மடக்கி காவல் துறை சோதனை செய்த போது அதில் இருந்து போதை மாத்திரைகள் , பவுடர்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதனை விற்பனை செய்து வந்த உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த நில்ஷா திவாரியை கைது செய்து காவல் துறையினர் தீவிர விசாரணை செய்தனர். அப்பொழுது அது MDN – 20gm கொண்ட போதை பவுடர் என்றும், தொடர்ந்து நடனம் ஆடுவதற்குப் பயன்படுத்தப்படும் போதை மருந்து என்றும் தெரிய வந்தது. இந்த சோதனையில் மொத்தம் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதை மாத்திரையைப் பறிமுதல் செய்துள்ள காவல் துறை அவர்களிடம் தீவிர விசாரணையையும் மேற்கொண்டுள்ளனர்.

சென்னையில் சிக்கிய போதைப் பொருள் பாம்பு விஷத்தில் தயாரிக்கப்பட்டதா? என்பதைக் கண்டறியவும், போதைப் பொருளின் தன்மையைக் கண்டுபிடிக்கவும் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நடன விருந்துக்கு எடுத்துவரப்பட்ட போதைப்பொருள் என்பதால் பாம்பு விஷம் குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. பாம்பு விஷ போதையை சாப்பிட்டால் வெறிகொண்டு நடனமாட முடியும் எனவும், இந்த போதையில் இருந்து விடுபட 7 மணி நேரம் முதல் ஒரு வாரக் காலமாகும் எனவும் கூறப்படுகிறது. திருவண்ணாமலையில் ரஷ்யப் பெண் பலாத்கார வழக்கில் பாம்பு விஷ போதை அம்பலமானது. அதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தற்பொழுது நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share