`சென்னையில் மோட்டோரோலா விற்பனையகம்!

Published On:

| By Balaji

p

அமெரிக்காவைச் சேர்ந்த மொபைல் தயாரிப்பு நிறுவனமான லேனோவோ குழுமத்துக்குச் சொந்தமான மோட்டோரோலா நிறுவனம் தென்னிந்தியாவில் முதன்முறையாகச் சென்னையில் அதன் விற்பனை மையத்தைத் தொடங்கவுள்ளது.

சீன நிறுவனங்களின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து தற்போது அமெரிக்க நிறுவனமான மோட்டோரோலா சென்னையில் விஜயா ஃபோரம் மாலில் புதிய விற்பனை மையத்தைத் தொடங்கவுள்ளது. மோட்டோரோலாவின் அனைத்து விதமான மாடல்களும் எளிதில் கிடைக்கும் வண்ணம் இந்த விற்பனை மையம் தொடங்கப்படவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மோட்டோரோலா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான சுதின் மதுர் கூறுகையில், இந்தியாவில் மோட்டோரோலா ஸ்மார்ட்போன் விற்பனையில் முக்கிய ஐந்து நகரங்களில் சென்னையும் ஒன்றாகும். இங்கு மோட்டோரோலா பொருட்களுக்கான தேவை அதிகமாக உள்ளது. எனவே சென்னையில் முதன்முறையாக விற்பனை மையத்தைத் தொடங்கவுள்ளோம். இதன் மூலம் இந்தியாவில் தொடங்கப்படும் விற்பனை மையங்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து தென்னிந்தியாவின் மேலும் பல இடங்களில் விற்பனை மையங்களைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம்” என்று கூறியுள்ளார்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment