சென்னையில் அனுபம் கெர் நடிக்கும் நாடகத்தின் பர்ஸ்ட் லுக்!

public

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஶ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம், பல படங்களைத் தயாரித்தும் விநியோகம் செய்தும் வந்தாலும் தேனாண்டாள் என்டர்டெய்ன்மெண்ட் எனும் பெயரில் கச்சேரி மற்றும் டிராமாக்களையும் தயாரித்து வருகிறது. இந்நிறுவனம் சார்பாக தற்போது தயாராகி வரும் ஹிந்தி நாடகம் ‘மேரா ஓ மத்லப் நஹி தா’. ராகேஷ் ரெட்டி இயக்கத்தில் அனுபம் கெர், நீனா குப்தா ஆகியோர் இதில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் இந்நாடகத்தின் முதல் பார்வையை இயக்குநர் மணிரத்னம் வெளியிட தயாரிப்பாளர் முரளியின் துணைவியார் ஹேமா ருக்மணி பெற்று கொண்டார். இந்நாடகம் வரும் செப்டம்பர் 18ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் சென்னை மியூசிக் அகாடமியில் அரங்கேற்றப்படவுள்ளது. இதன்மூலம் கிடைக்கும் வசூலை ஏழை குழந்தைகளின் கல்விச் செலவுக்காகப் பயன்படுத்த தேனாண்டாள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *