சென்னை வியாசர்பாடி எம்.எம். கார்டன் பகுதியைச் சேர்ந்த வல்லரசு மீது கொலை வழக்குகள், குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. சென்னை வியாசர்பாடி போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த காவலர் பவுன்ராஜ் உள்ளிட்ட காவலர்கள் நேற்று (ஜூன் 14) வல்லரசு பற்றிய தகவல் கிடைத்து, விசாரிப்பதற்காக சென்றிருக்கிறார்கள்.
நேற்று மாலை போலீஸார் சென்றபோது வல்லரசு வீட்டில் அவரும் அவரது கூட்டாளி கதிரும் வீட்டில் இருந்தனர். விசாரிக்கச் சென்ற போலீஸாரை கதிர், வல்லரசு ஆகியோர் சேர்ந்து கத்தியால், தாக்க பவுன்ராஜுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் கன்ட்ரோல் ரூமுக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீஸார் அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். பவுன்ராஜின் தலையில் சுமார் இருபது தையல்கள் போடும் அளவுக்கு வெட்டுக் காயங்கள் ஏற்பட்டதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். உடனடியாக போலீசார் எம்.எம். கார்டன் பகுதிக்குச் சென்றனர். அதற்குள் கதிர், வல்லரசு ஆகியோர் தப்பித்துச் சென்றுவிட்டனர்.
தகவல் அறிந்த உயரதிகாரிகள் உடனடியாக ஆய்வாளர்கள் மில்லர், ரவி ஆகியோர் தலைமையில் ரவுடி வல்லரசுவைத் தேட உத்தரவிட்டனர். இந்தக் குழுவினர் இரவு முழுதும் தேடுதல் வேட்டை நடத்தியதில் வல்லரசு மாதவரம் பேருந்து நிலையம் அருகே பதுங்கியிருப்பது தெரியவந்தது. இன்று (ஜூன் 15) காலை 4 15 மணிக்கு வல்லரசுவை போலீசார் நெருங்கியபோது அப்போதும் வல்லரசு போலீசாரை நோக்கி கத்தியைச் சுழற்றினார். இந்த தாக்குதலில் இரு உதவி ஆய்வாளர்கள் காயம் அடைந்தனர். அப்போது தற்காப்புக்காக போலீஸார் சுட்டதில் வல்லரசு உயிரிழந்தார் என்று போலீஸ் வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கின்றனர்.
வல்லரசு என்கவுன்ட்டர் பற்றி சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் ஆய்வு செய்து வருகிறார்.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கலைப்பு- ஸ்டாலினை குறிவைக்கும் வருமான வரித்துறை!](https://minnambalam.com/k/2019/06/14/65)**
**[தினகரன் தளபதிக்கு எடப்பாடி தூது: ஜெயக்குமார் எதிர்ப்பு!](https://minnambalam.com/k/2019/06/14/51)**
**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**
**[மூடப்படும் அருவிகள்: கேரளத்தில் பண மழை!](https://minnambalam.com/k/2019/06/14/20)**
**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**
�,”