}செக்கச்சிவந்த வானத்தில் ‘ஓகே கண்மணி’ பிரபலம்!

Published On:

| By Balaji

செக்கச் சிவந்த வானம் படத்தின் டிரைலர், டீசர் போன்றவைகளை வடிவமைக்க படத்தொகுப்பாளர் புவன் ஸ்ரீநிவாசன் இணைந்துள்ளார்.

பல முன்னணி தமிழ் நடிகர்-நடிகைகளைக் கொண்டு உருவாகிவரும் படம் செக்கச்சிவந்த வானம். இயக்குநர் மணிரத்னம் இயக்கிவரும் இப்படத்தின் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியீட்டை முன்னிட்டு பரபரப்பாக இயங்கிவருகிறது படக்குழு. இந்நிலையில் இதன் டிரைலர், டீசர், விளம்பரங்கள், விஸூவல் மற்றும் டிவி புரோமோக்களை வடிவமைக்க படத்தொகுப்பாளர் புவன் ஸ்ரீநிவாசன் படக்குழுவில் இணைந்திருக்கிறார்.

இவர் மணிரத்னத்துடன் இணைவது முதல்முறை அல்ல. ஏற்கனெவே வெளியான ஓ காதல் கண்மணி படத்திலும் இதே போன்ற பணிக்காக அவர் இணைந்து பணியாற்றியிருந்தார். இவர் விக்ரம் நடித்த இருமுகன் படத்தின் படத்தொகுப்பாளர் எனும் விஷயம் குறிப்பிடத்தக்கது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share