சுற்றுச்சூழல் அனுமதிக்குப் புதிய நிபந்தனைகள்!

Published On:

| By Balaji

இரும்பு, நிலக்கரி, எண்ணெய் உட்பட 25 தொழில் துறைகளில் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்குப் பின்பற்றப்பட வேண்டிய தர நிர்ணய நிலை குறித்த புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது மத்திய அரசு. திட்ட விரிவாக்கம் மற்றும் புதிய திட்டங்களுக்கு இந்த நிபந்தனைகள் பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளது.

மத்திய அரசானது சுற்றுச்சூழல் அனுமதி குறித்த மதிப்பீட்டு நிபுணர் குழுவை அமைத்துள்ளது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அளிக்கும் சுற்றுச்சூழல் அனுமதியின் அடிப்படையில், இந்தக் குழு தொழில் துறை திட்டங்களை மதிப்பிட்டு, அதற்கான பரிந்துரைகளை உருவாக்கும். “அனைத்துத் துறைகளிலும், அவை சார்ந்த திட்டங்களிலும் சீரான விதிமுறைகள், நிபந்தனைகளை ஒரேமாதிரியாக ஏற்படுத்தும் விதமாகவும், மதிப்பீட்டு நிபுணர் குழு மற்றும் திட்ட ஆதரவாளர்களுக்குப் பொது வழிமுறைகளாகவும், 25 துறைகளுக்கான தர நிர்ணய நிபந்தனைகளை அமைச்சகம் தயார் செய்துள்ளது” என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம். இரும்பு, சிமென்ட், நிலக்கரி, பெட்ரோலிய சுத்திகரிப்பு, காகிதம், விளக்குகள், நீர்மின் திட்டங்கள், தொழில் மண்டலங்கள் உட்பட 25 துறைகள் இதில் அடங்கும்.

திட்ட விரிவாக்கம் மற்றும் புதிய திட்டங்களுக்கான சுற்றுச்சூழல் அனுமதி பெறும்போது, இவற்றை மதிப்பீட்டு நிபுணர் குழு கவனத்தில் எடுத்துக்கொள்ளும். சம்பந்தப்பட்ட திட்டத்தின் தேவைகளைக் கருத்தில் எடுத்துக்கொண்டு, மதிப்பீட்டு நிபுணர் குழு இந்த நிபந்தனைகளைச் சீராக்கவோ, மாற்றவோ, நீக்கவோ, புதிதாகச் சேர்க்கவோ முடியும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதிப்பீட்டு நிபுணர் குழு பரிந்துரைக்கும் நிபந்தனைகள் ஆலோசனைக் கூட்டத்தின் குறிப்பில் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share