சுசீந்திரன்: மெர்சல் விஜய் ரசிகர்களுக்கு விருந்து!

public

மெர்சல் விஜய் ரசிகர்களுக்கு விருந்து என்று தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் சுசிந்தீரன் தெரிவித்திருக்கிறார்.

மெர்சல் திரைப்படம் நேற்று (அக்டோபர் 18) வெளியானதிலிருந்து பல்வேறு பாராட்டுகளையும் விமர்சங்களையும் பெற்றுவருகிறது. முதல் நாள் வசூல் சாதனையில் கபாலி படத்தைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளதாகவும், விஜய் ரசிகர்களைத் திருப்திபடுத்தியதோடு மட்டுமில்லாமல் சமூகக் கருத்துக்களைப் பேசும் படமாகவும் இருப்பதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர். ஜி.எஸ்.டி., டிஜிட்டல் இந்தியா போன்றவற்றை விமர்சிப்பதால் அந்தக் காட்சிகளை நீக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இப்படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் சுசீந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கடிதமொன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், “பிரம்மாண்டமான பட்ஜெட்டில் நல்ல சமூகக் கருத்து. விஜய் சாருக்கு அதிகம் நடிக்க வாய்ப்பு கிடைத்த திரைப்படம். அதைச் சிறப்பாகச் செய்துள்ளார். விஜய் சார் என்றால் மாஸ். சமந்தா – விஜய் சார் காதல் காட்சிகள், விஜய் சாரின் நக்கல் கலந்த வசன உச்சரிப்பு, வடிவேலு சாரின் இந்தியாவின் தற்போதைய நிலையை இந்தியாவுல எல்லாரும் பொறங்கையதான் நக்கிட்டு இருக்கானுங்க” என்று ஏடிஎம் கார்டு பற்றி கூறுவது, அனல் அரசுவின் சண்டைக் காட்சிகள், ஷோபி மாஸ், கேமிரா மேன் விஷ்ணு, அட்லி என அனைவரும் கடினமாக உழைத்துள்ளனர். ரஹ்மான் சாரின் பின்னணி இசை, பாடல்கள் இரண்டுமே செம. ‘மெர்சல்’ விஜய் ரசிகர்களுக்கு விருந்து” என்று பதிவிட்டுள்ளார்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *