இந்தியாவின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் விற்பனை நிறுவனமாக மைக்ரோமேக்ஸ் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் 2020-ம் ஆண்டில் உலகளவில் ஐந்தாவது பெரிய ஸ்மார்ட்போன் நிறுவனமாக மாறத் திட்டமிட்டுள்ளது. இதற்கான நிதி திரட்டலில் தற்போது ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்காக சீனாவில் கால்பதிக்க திட்டமிட்டிருக்கிறது. இந்த தகவலை அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் விகாஸ் ஜெயின் ஹாங்காங்கில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது தெரிவித்தார். சாம்சங்கும், ஆப்பிளும் சீனாவில் இருப்பதைச் சுட்டிக்காட்டி பேசிய அவர் இதனைத் தெரிவித்தார். இந்நிறுவனம் ஏற்கனவே, ரஷ்யாவில் கால்பதித்து அந்நாட்டின் மூன்றாவது பெரிய ஸ்மார்ட்போன் நிறுவனமாக மாறியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சீன மார்க்கெட்டில் தற்போது 800 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் உள்ளன. இந்நிலையில், சந்தையில் ஸ்மார்ட்போன் வாங்குவதில் 31 சதவிகிதத்தினர் சீனர்கள் என்பதால், மைக்ரோமேக்ஸுக்கு வலுவான ஒரு சந்தை இருக்கிறது. எனவே, அடுத்த இரண்டாண்டுகளில் நிதி நிறுவனங்கள்மூலம் பணம் திரட்ட இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.�,
சீன சந்தையில் கால்பதிக்கத் திட்டமிடும் மைக்ரோமேக்ஸ்
+1
+1
+1
+1
+1
+1
+1