சீனாவிலிருந்து சென்னைக்கு வரும் ஐபோன் உற்பத்தி!

public

Bஇந்தியாவில் இந்தாண்டு முதல் ஆப்பிள் ஐபோன்கள் பெருமளவில் உற்பத்தி செய்யப்படும் என்று ஃபாக்ஸ்கான் டெக்னாலஜி குழுமத்தின் தலைவர் டெரி கவு தெரிவித்துள்ளார். இதுவரையில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஐபோன்கள் சீனாவிலேயே பெருமளவில் உற்பத்தி செய்து உலகம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில் இந்நிறுவனம் தற்போது இந்தியாவை ஐபோன் உற்பத்திக்காகக் குறிவைத்துள்ளது.

தைவான் நாட்டைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தொழிலை இந்தியாவில் விரிவுபடுத்துவதற்காகத் தனக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்ததாகவும் டெரி கவு தெரிவித்துள்ளார். ஏற்கெனவே பழைய ஐபோன் மாடல்கள் பெங்களூருவிலுள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் சில ஆண்டுகளாக உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், இனி புதிய மற்றும் அண்மையில் வெளியான மாடல்களை உற்பத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக அண்மை மாடல்களை உற்பத்தி செய்ய ஃபாக்ஸ்கான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பின்னர், சென்னை புறநகர் பகுதியிலுள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் புதிய மாடல்களை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தைவானில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டெரி கவு, “எதிர்காலத்தில் இந்திய ஸ்மார்ட்போன் தொழிற்துறையில் நாங்கள் முக்கிய பங்கு வகிப்போம். ஃபாக்ஸ்கான் நிறுவனத்துக்கு சீன சந்தை நிறைவுற்றது. ஏனெனில், இந்தியாவிலுள்ள தொழிலாளர் செலவுகளை விட சீனாவில் மூன்று மடங்கு அதிகமாக உள்ளது” என்று பேசினார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0