இந்த ஆண்டு நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் கருணை அடிப்படையில் மதிப்பெண் வழங்க சி.பி.எஸ்.இ. முடிவுசெய்துள்ளது.
பஞ்சாப், கோவா, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உட்பட ஐந்து மாநில தேர்தல்கள் பிப்ரவரி 4ஆம் தேதி முதல் மார்ச் முதல் வாரம் வரை நடைபெற்றதால், சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வில் சில பாடங்களின் தேர்வுத் தேதிகள் மாற்றப்பட்டன. தேர்வு தாமதமாக தொடங்கியதால் தேர்வு முடிவுகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தற்போது, தேர்வுத் தாள்களை திருத்தும் பணியை சி.பி.எஸ்.இ. தொடங்கியுள்ளது. சி.பி.எஸ்.இ., குறிப்பிட்டுள்ளபடி, மதிப்பெண் வழங்கும் திட்டம் இந்த ஆண்டு கருணை அடிப்படையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் கடினமான கேள்விகளுக்கு, கருணை அடிப்படையில் மதிப்பெண் வழங்கும் கொள்கையை கைவிடுவதாக சி.பி.எஸ்.இ., கடந்த வாரம் அறிவித்தது. எனினும், மாணவர்கள் தேர்ச்சி பெற ஒருசில மதிப்பெண்கள் தேவைப்படும் சூழலில் மட்டும் இந்தக் கொள்கை தளர்த்தப்படும் என தெரிவித்தது.
இந்த ஆண்டு மார்ச் 20ஆம் தேதி நடைபெற்ற கணக்குத் தேர்வு கடினமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மதிப்பெண் வழங்கும் திட்டம் கருணை அடிப்படையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மறுபுறம் கருணை அடிப்படையில் மதிப்பெண் கிடையாது என சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. எனவே, இந்த ஆண்டு சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும்.�,