சிவகார்த்தி படத்தில் அறிமுகமாகும் தொழில்நுட்பம்!

public

இந்தியாவில் முதன்முறையாக அலெக்ஸா எல்.எஃப் என்ற உயர் ரக கேமரா சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் அறிமுகமாகிறது.

சீமராஜா படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த சிவகார்த்திகேயன் தற்போது தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இன்று நேற்று நாளை படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ரவிக்குமார் இயக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. சைன்ஸ் ஃபிக்சன் ஜானரில் உருவாகும் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளராக நிரவ் ஷா பணியாற்றவுள்ளார்.

இந்தியத் திரையுலகில் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக வலம் வருகிறார் நிரவ் ஷா. இவர் 2004ஆம் ஆண்டு வெளியான பைசா வசூல் என்ற இந்தி திரைப்படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். அதன் பின் தமிழில் கவனம் செலுத்திய இவர் இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் அனைத்துப் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர்கள் கூட்டணியில் உருவான மதராசபட்டணம் இவருக்கு நல்ல பெயரைப் பெற்று தந்தது.

அதேபோல் இயக்குநர் விஷ்ணுவர்தனின் ஆரம்பகால படங்களுக்கு இவர்தான் ஒளிப்பதிவாளர். பில்லா திரைப்படத்தில், ஹாலிவுட் திரைப்படங்களுக்கு உரிய வண்ணக் கலவையை கேமராவிலேயே கையாண்டார் நிரவ் ஷா. ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.O திரைப்படத்தை 3டி தொழில்நுட்பத்தில் படம் பிடித்துவருகிறார்.

தற்போது சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கவுள்ள திரைப்படத்தின் மூலம் அலெக்ஸா எல்.எஃப் என்ற கேமராவை இந்தியாவிற்கு அறிமுகம் செய்துள்ளார். அலெக்ஸா ஒரு ஜெர்மானிய நிறுவனமாகும். உலகம் முழுவதுமுள்ள திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் அலெக்ஸா மற்றும் ரெட் என்ற குடும்பத்தை சேர்ந்த கேமராவையே பயன்படுத்துகிறார்கள். அதில் ரெட் கேமரா 8k ரெஸலூசன் வரை அப்டேட் ஆகியுள்ளது. ஆனால் அலெக்ஸா இந்த ஆண்டுதான் 4k ரெஸலூசனில் அறிமுகமாகியுள்ளது. இருப்பினும் ரெட் கேமராவை விடச் சிறப்பும், துல்லியமாக படம்பிடிக்கும் வசதிகளும் அலெக்ஸாவில் உள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *