]சிவகார்த்திக்கு பாலிவுட் வில்லன்!

Published On:

| By Balaji

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் பாலிவுட் நடிகர் அபே தியால் இணைந்துள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது ஒரே நேரத்தில் நான்கு படங்கள் தயாராகிவருகின்றன. இதில் சயின்ஸ் பிக்சன் பாணியில் ரவிக்குமார் புதிய படத்தை இயக்கிவர, மதுரை வட்டாரப் பின்னணியில் பாண்டிராஜ் ஒரு புதிய படத்தை இயக்குகிறார். விக்னேஷ் சிவனும் திரைக்கதையை முடித்து ஆரம்பகட்டப் பணிகளை தொடங்கிவிட்டார். இவற்றில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு மட்டும் பெயரிடப்பட்டுள்ளது.

ஹீரோ என்ற பெயரில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கியது. இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி இதன் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். நாச்சியார் படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்த இவானா மற்றொரு கதாநாயகியாக இணைந்துள்ளார். வில்லன் கதாபாத்திரத்தில் அர்ஜுன் நடிப்பதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பாலிவுட் நடிகர் அபே தியாலும் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

பி.எஸ்.மித்ரன் இயக்கிய இரும்புத்திரை வில்லனுக்கு முக்கியத்துவமளிக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. இதில் இரு வில்லன்கள் எனும் போது திரைக்கதை மீது எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். அந்தோணி ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். கே.ஜே.ஆர்.ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.

**

மேலும் படிக்க

**

**[பிக் பாஸ் 3: ஜஸ்ட் லைக் தட் சிறுசுகள்!](https://minnambalam.com/k/2019/07/19/9)**

**[டிஜிட்டல் திண்ணை: ரஜினி Vs ஸ்டாலின் -ஜோதிடர் மூட்டிய கலகம்!](https://minnambalam.com/k/2019/07/18/82)**

**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share