சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் பாராதிராஜா இணைந்துள்ளார்.
தமிழ்த் திரையுலகில் சமீபகாலத்தில் முன்னணி கதாநாயகர்களின் பட்டியலில் விரைவாக இணைந்தவர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் நடிப்பில் ஐந்து படங்கள் வெவ்வேறு கட்டங்களில் தயாராகி வருகின்றன. அதில் ஒன்று இயக்குநர் பாண்டிராஜ் இயக்கும் புதிய படம்.
சின்னத்திரையில் வலம்வந்த சிவகார்த்திகேயனைத் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர் பாண்டிராஜ். மெரினா திரைப்படத்தைத் தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தையும் இவர்கள் இணைந்து உருவாக்கினர். தற்போது ஆறு ஆண்டுகளுக்குப் பின் இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் பாரதிராஜா தற்போது இணைந்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.
பாரதிராஜா, சுசீந்திரன் இயக்கிவரும் ‘கென்னடி கிளப்’ படத்தில் நடித்து வருகிறார் . பெண்கள் கபடியை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது.�,