சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு தேதியைக் குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி, கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு, தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிலைக் கடத்தல் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட 113 வழக்குகளின் ஆவணங்களை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளதாகவும், மத்திய அரசு இந்த வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றினால் தமிழக அரசு முழு ஒத்துழைப்பை வழங்கும் எனவும் தெரிவித்திருந்தார் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று (நவம்பர் 22) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றியது குறித்து, சிபிஐயுடன் ஆலோசித்து முடிவெடுக்க அவகாசம் வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மத்திய அரசின் இந்தக் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.�,