பாலியல் பலாத்காரத்தால் கருவுற்ற 14 வயது சிறுமியின் 18 வார கருவைக் கலைக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு ரவுடி ஒருவரால் பாலியல் பலாத்காரத்துக்குள்ளானார். இதனால் சிறுமி கருவுற்றார். இதுகுறித்து தகவல் அறிந்த காஞ்சிபுர மாவட்ட குழந்தைகள் நலக் குழு தலைவர், கருவைக் கலைக்க அனுமதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம், இதுகுறித்து மகப்பேறு மருத்துவர் கருத்து தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதற்கு, மகப்பேறியல் துறை தலைவர் மருத்துவர் வசந்தா ஒப்புதல் அளித்திருந்தார்.
இந்நிலையில், இன்று (மே4) மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி டி.ராஜா, 14 வயது சிறுமியின் 18 வார கருவைக் கலைக்க உத்தரவிட்டார்.�,