சிறப்புப் பேட்டி: நெஸ்லே இந்தியா தலைவர் சுரேஷ் நாராயணன்

public

சுவிட்சர்லாந்தின் முன்னணி நுகர்பொருள் உணவு தயாரிப்பு நிறுவனமான நெஸ்லே, இந்தியாவிலும் உணவுப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் குழந்தைகளுக்கான உணவு, பால் பொருட்கள், பானங்கள், சாக்லேட் மற்றும் மிட்டாய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்துவருகிறது. இந்நிறுவனத்தின் மேகி விவகாரம் கொடுத்த நெருக்கடியிலிருந்து மீண்டு வருகையில், கடந்த நவம்பர் மாதம் வெளியான பண மதிப்பழிப்பு நடவடிக்கை வெளியாகி விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தியது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக சரிவை சந்தித்து வரும் நெஸ்லே நிறுவனத்தின் இந்திய தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் முதல் இந்தியரான சுரேஷ் நாராயணனிடம் ஒரு நேர்காணல்.

**மேகி பிரச்னை தந்த நெருக்கடியிலிருந்து மீண்டு கொண்டிருக்கையிலேயே, பண மதிப்பழிப்பு நடவடிக்கை வெளியானது. அதன் தாக்கம் எப்படி இருந்தது?**

நிச்சயமற்றத் தன்மையும், ஏற்ற இறக்கங்களும் நிறைந்ததே வாழ்க்கை. ஒரு சிறு பிரச்னை கூட இல்லாமல் நான் ஒரு வாரமோ, மாதமோ கடக்கவே முடியாது. ஒரு தலைவராக என் தரப்பிலிருந்து அந்த பிரச்னைக்கு எந்த தீர்வு கொடுக்க முயன்றேன் என்பதே முக்கியம்.

பண மதிப்பழிப்பு நடவடிக்கை என்பது முற்றிலும் எதிர்பார்த்திராத ஒன்று. அடிமட்ட அளவில் எங்களது வியாபாரத்தில் சிறு சரிவு ஏற்பட்டது உண்மைதான். இயல்பு நிலை திரும்ப ஒரு மாத காலம் ஆனது. தற்போது எப்போதும் போல விற்பனை நடைபெற்று வருகிறது.

**இந்தியாவில் நிலவும் இந்த நிச்சயமற்றத் தன்மை மற்றும் ஏற்ற இறக்கங்களை நெஸ்லே எப்படி எதிர்கொள்கிறது?**

நெஸ்லே கிட்டத்தட்ட 200 நாடுகளில் இயங்கி வருகிறது. எனவே நமது நாட்டில் நிலவும் நிச்சயமற்றத் தன்மை அவற்றிலிருந்து வேறுபடக் கூடியது. வெனிசுலா, ஜிம்பாப்வே, இந்தியா சீனா மற்றும் ஆப்ரிக்காவின் சில பகுதிகளில் ஏற்ற இறக்க பிரச்னைகள் உள்ளன. எங்களுடைய நெஸ்லே 150 ஆண்டு காலமாக இயங்கி வரும் நிறுவனம். பிரச்னைகளை கண்டு அஞ்சுகிற கத்து குட்டிகள் இல்லை.

எங்களது நிறுவனம் மற்றும் இந்திய குழுமத்தின் வலிமையுடன் பிரச்னைகளை கடந்து வந்துள்ளோம். இந்தியாவில் இருந்த பிரச்னைகள் தற்போது உறுதியாக நீங்கிவிட்டன. எங்களுக்கு புதிய சி.இ.ஒ. மார்க் ஸ்னைடர் கிடைத்திருக்கிறார். அவரும் இந்தியா பற்றிய அதே கருத்தை கூறியுள்ளார். எனவே எங்களுக்கு கவலைப்பட ஒன்றுமே இல்லை.

மேலும் அவசர கால பிரச்னைகளுக்கு லோகல் போர்ட் எங்களுக்கு மிக உறுதுணையாக இருக்கிறது. நான் இதை திமிரில் சொல்லவில்லை. ஏனெனில் வெகு சில நிறுவனங்களுக்கு மட்டுமே இது அமையும். இது போன்ற பிரச்னைகள் வேறு ஏதாவது நிறுவனத்துக்கு வந்திருந்தால் இந்நேரம் அது மூடப்பட்டிருக்கும்.

**மேகி விவகாரம் முழுமையாக முடிந்துவிட்டதா? முன்பு இருந்தது போல வர்த்தகம் நடக்கிறதா?**

எங்களது சந்தை பங்கு 60 சதவிகிதமாக உள்ளது. இதற்கு முன்னால் அது 80 சதவிகிதமாக இருந்தது. எனவே இது இயல்பு நிலையை நோக்கிய அளவீடு ஆகும். எனினும் இந்த பிரச்னையில் இருந்து முழுமையாக வெளியேறி விட்டதாகவே நான் கருதுகிறேன். ஆம், நாங்கள் வணிகத்தில் மீண்டும் முன்னிலைக்கு வந்துவிட்டோம்.

**ஒட்டுமொத்தமாக இந்திய தொழில்துறை சரிவை சந்தித்து வருகிறது. வளர்ச்சிக்கான உங்களது திட்டம் என்ன?**

ஆம். பாதிப்புகள் இருக்கவே செய்கின்றன. முக்கியமாக துரித நுகர்வுப் பொருளுக்கான தேவை குறைந்து வருகிறது. நல்ல பருவமழை, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை போன்ற காரணிகள் எங்களுக்கு நம்பிக்கையைத் தருகின்றன.

பண மதிப்பழிப்பு போல பல்வேறு பாதிப்புக் காரணிகளை நிறுவனம் சந்தித்து வருகிறது. எனினும் எச்சரிக்கையுடன் நம்பிக்கை பாதையை தேர்ந்தெடுத்து முன்னேறுவதே சிறந்தது என நினைக்கிறேன். சிறியதோ பெரியதோ அனைத்து நிறுவனங்களுமே ஏதோவொரு பாதிப்பை எதிர்கொண்டே வருகின்றன. அதற்கான உடனடித் தீர்வுகளை ஏற்படுத்த முடியாது. குறைந்தது ஒன்று அல்லது இரண்டு காலாண்டுகள் ஆகும்.

**சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தில் நெஸ்லேவின் பங்கு என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?**

நெஸ்லே ஹெல்த் சைன்ஸ் என்ற பிரிவில் நாங்கள் பல தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறோம். அதன்மூலம் அறுவை சிகிச்சைக்கு பிறகு அளிக்க வேண்டிய உணவுப் பொருட்கள், புற்று நோயால் பாதிகப்பட்டவர்களுக்கான உணவுகள் போன்றவற்றை வழங்கி வருகிறோம்.

மேலும் வளர்சிதை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான பிரத்யேக உணவுகளை வழங்கி தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். அது மட்டுமல்லாமல் fortification முறையில் ஊட்டச்சத்துகளை கலந்து அளிக்கும் முறையை விரிவுபடுத்த உள்ளோம். அதன்படி மசாலா மேஜிக் உணவுப் பொருளில் அயோடின், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஏ போன்றவை உள்ளடக்கியதாகும்.

இந்த முறையை நாங்கள் பால் பொருட்களிலும் பயன்படுத்த உள்ளோம். மேலும் fortification முறையில் ஊட்டச்சத்துகள் நிறைந்த நூடில்ஸ்களையும் தயாரித்து விற்பனை செய்ய உள்ளோம்.

தொகுப்பு: யுத்திகா பார்கவா

நன்றி: [தி இந்து]( http://www.thehindu.com/business/Industry/demonetisation-did-take-a-toll/article17335637.ece)

தமிழில்: பீட்டர் ரெமிஜியஸ்�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *