சிறப்புப் பார்வை: மோடியின் தூய்மை இந்தியா திட்டம் தோல்வியா?

public

ரவிச்சந்திரன் பத்ரன்

2014இல் பிரதமர் நரேந்திர மோடி நம்மைச் சுற்றியுள்ள அசுத்தத்தைத் தூய்மைப்படுத்திட உறுதிமொழி எடுத்துக்கொண்டார். அவர் கூற்றின்படி ஏழைகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் சுற்றுலாத் துறையை மேம்படுத்த இந்த அசுத்தம் இடைஞ்சலாக இருக்கும். மோடி 2019ஆம் ஆண்டுக்குள் காந்தியின் 150ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை இந்தியாவை அடைந்து விடுவது என்ற இலக்கை தனது அரசு கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

ஸ்வாச் பாரத் அபியான் என்ற தூய்மை இந்தியா திட்டம் தேசம் தழுவிய இதுவரை இல்லாத திட்டமாகும். இது பொதுமக்களை உத்வேகப்படுத்தி தன்னார்வத்துடன் ஒரு தேசத்துக்குச் சேவை என்ற வகையில் பொது இடங்களைச் சுத்தம் செய்திட வைக்கும் திட்டமாகும். இந்தப் பிரச்சாரம் ஆரம்பத்தில் பிரபலங்களை வைத்து பாதுகாப்பு கவசங்களை அணிந்துகொண்டு அவர்கள் தெருக்கூட்டுவதைப் போன்று புகைப்படங்களுடன் பிரச்சாரம் செய்யப்பட்டது.

வணிக ஊடகத்தின் திட்டமிட்டபடி இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களை அலங்கரித்தன. தற்போது நகராட்சிகள் அதிகமான ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமிக்கத் தொடங்கியுள்ளனர். அவர்கள் பெரும்பாலும் துப்புரவுத் தொழிலாளர்கள் தங்களது சாதியின் காரணமாக இந்தத் தொழிலுக்குள் நிர்பந்தப்படுத்தப்பட்டுத் தள்ளப்பட்டவர்கள் கழிவுகளை அகற்றுவதற்காக. அதாவது சாதியத்தின் கழிவுகளாக இருப்பவர்கள் மனிதர்களின் கழிவுகளை அகற்றுவதற்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளார்கள்.

மேற்கத்திய அணுகுமுறையைப் பின்பற்றி…

இந்த அணுகுமுறையானது 19ஆம் நூற்றாண்டில் கடைப்பிடிக்கப்பட்ட பொது இடங்களில் மக்கள் பார்வையில் தென்படும் அசுத்தங்களை அகற்றுவது என்ற மேற்கத்திய பாணியை எந்தவித விமர்சனமும் இன்றி ஏற்றுக்கொண்டதாகும். மேற்கத்திய நாடுகளில் நோய் பரவுவதை தடுப்பதுதான் முதன்மை நோக்கமாக இருந்தது. ஆனால், இன்று சுகாதாரம் என்பது அழகிய உணர்வுடன் இணைந்துள்ளது. அதாவது சுகாதாரம் என்பது நம்மைச்சுற்றி அசுத்தம் இன்றி இருப்பது என்று அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்குலகம் கழிவை அகற்றுவதற்கு தொழில்நுட்பங்களைத் திட்டமிட்டபடி அமல்படுத்தியது. உதாரணமாக 1858இல் லண்டன் வாழ் மக்கள் மோசமான துர்நாற்றத்தை அனுபவித்தபோது அரசு ஓர் ஒருங்கிணைந்த முழுமையான சாக்கடை கழிவுநீர்த் திட்டம் தேவை என உணர்ந்தது. அது லண்டனின் நீர் கட்டுமானத்தின் ஒரு பகுதியாக அமைந்தது, அதன் மூலம் நிலைத்த, நீடித்த முறையில் தேம்ஸ் நதியிலிருந்து கழிவுகளை அகற்றுவது, அவற்றைச் சுத்திகரிப்பது சாத்தியமானது. விரைவிலேயே வீடுகளிலும் கடைகளிலும் கழிப்பறைகளும் கட்டுவது கட்டாயமாக்கப்பட்டது.

பாதாள சாக்கடை பற்றி மௌனம்

ஸ்வாச் பாரத் அபியான் பிரச்சாரம் பாதாள சாக்கடைத் திட்டத்தைப் புனரமைப்பது குறித்து மௌனமே சாதிக்கிறது. இது மிகவும் கவலைக்குரிய விஷயம். ஏனெனில், பல தொழிலாளர்கள் சாக்கடையைச் சுத்தம் செய்யும்போது உயிரிழந்துள்ளனர். மிகுந்த அதிர்ச்சியளிக்கக்கூடிய விஷயமே இந்த மரணங்களில் சாதியின் முகம் படிந்துள்ளது. 2017 டிசம்பரில், மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரப்படுத்துதல் அமைச்சகம் நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட பதிலில் கையி்ல் மலம் அள்ளும் துப்புரவுத் தொழிலில் சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்யும்போது 300 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் அதே சாதியைச் சேர்ந்தவர்களே. இந்தத் தகவல் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.

பொது மக்களுக்கு எங்கு சிறுநீர் கழிக்க வேண்டும், மலம் கழிக்க வேண்டும், எங்கு குப்பை போட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட வேண்டும். இந்தப் பிரச்சாரம் ஒப்பந்த தொழிலாளர்களை மட்டும் பொது இடங்களைச் சுத்தப்படுத்த கட்டாயப்படுத்துகிறது. ஆனால், அதே சமயத்தில் மக்களுக்குச் சிறுநீர் கழிப்பது மலம் கழிப்பது அல்லது குப்பை போடுவது போன்றவை தன்னார்வத் தொண்டாக மட்டுமே மேற்கொள்ளுமாறு போதிக்கப்படுகிறது.

கழிவும் களங்கமும்

இந்தியாவில் கழிவானது களங்கத்தைக் கொண்டுள்ளது. அது தீட்டோடும் சாதியோடும் ஒட்டிக்கொண்டுள்ளது. அதேபோல அதை அகற்றும் வேலையும் (துப்புரவுப் பணியும்) அந்தத் தொழிலும் (துப்புரவுத் தொழிலாளர்) சாதியோடு பின்னிப் பிணைந்துள்ளது. மேற்கத்திய நாடுகளில் உள்ளது போன்று இங்கு கழிவகற்றுபவர் ஒரு தொழில் சார்ந்தவர் அல்லர். அத்துடன் எந்த இடத்தில் கழிவகற்றப்படுவது என்பதும் கழிவுகள் கொட்டப்படுவதும் சாதியால் களங்கமான இடங்களாக உள்ளன. இவை அனைத்தும் சாதி தீட்டால் மாசுபடுத்தப்பட்டதாகக் கருதப்படுகிறது. சுருக்கமாக, தொழில் களங்கப்படுத்தப்படுகிறது. அது போன்று அவரது உழைப்பும் உடலும் இடமும் களங்கப்படுத்தப்படுகிறது.

கடந்த காலத்தில் நகராட்சிகளுக்கும் கடைகளுக்கும் வீடுகளுக்கும் இடையே குப்பைத் தொட்டிகளை வைத்து அதில் கழிவுகளை சேகரிப்பர். இந்தக் குப்பைத்தொட்டிகள் முதலில் அகற்றப்படும். பின்னர் வீடு வீடாகக் குப்பைகள் அகற்றப்படும். துப்புரவுத் தொழிலாளர்கள் குறிப்பிட்ட பகுதிகளில் அவர்கள் வந்துவிட்டதாக விசில் அடிப்பார்கள். அதன் பிறகு, வீட்டிலிருப்பவர்கள் பிரிக்கப்படாத குப்பையைக் கொண்டு வருவார்கள். அதை துப்புரவுத் தொழிலாளர்கள் அதை ஒரு சாக்கில் வாங்கிக்கொள்வார்கள். அவற்றை ஒரு குறிப்பிட்ட இடத்தில் சேர்த்து வைத்து அங்கிருந்து குப்பைக் கிடங்குக்குக் கொண்டு செல்லப்படும். பிரச்சாரத்தின்படி தொழிலாளர்கள் குப்பைக் கிடங்குக்குப் போய் அங்கு குப்பைகளை பிரிக்க வேண்டும். நிலத்தில் மலைபோல் கொட்டிக்கிடக்கும் குப்பைகளைப் பிரிப்பது அவர்களின் சுகாதாரத்தையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.

வீடு வீடாக குப்பைகளைச் சேகரிப்பது என்பது மோசமான வேலையாகும்.

தீண்டாமை விசில்

இவை 1993இல் தடை செய்யப்படுவதற்கு முன்னதாக இதேபோல வீடு வீடாக உலர் கழிப்பறைகளைக் காலி செய்யும் நடைமுறை இருந்தது. வீட்டருகே வரும் துப்புரவுத் தொழிலாளர் விசில் அடிப்பார். உடனே சம்பந்தப்பட்ட வீட்டிலிருப்பவர்கள் கழிப்பறைக்குச் செல்லும் பாதையிலிருந்தும் அவர்கள் கழிப்பறையிலிருந்தவற்றை அள்ளிக்கொண்டு போக கொண்டுவரும் பானையிலிருந்தும் கருவிகளிலிருந்தும் தொடக்கூடாத அளவில் விலகிக் கொள்வார்கள். அவர்களுக்கு வருவதற்குத் தனி வழி அமைக்கப்பட்டிருக்கும். அவர் அடிக்கும் விசிலானது அவர் வந்ததை மட்டும் அறிவிப்பதற்காக அல்ல. ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவரின் உடலை எந்த வகையிலும் தொடக் கூடாது என்பதற்கான எச்சரிக்கை விசிலாகவும் அது இருக்கும். சமகாலத்திலும் விசில் அடிக்கப்படுகிறது. அவர்கள் பொது இடத்தில் நடக்கும்போது அந்த பொதுப் பாதையில் சாதி இந்துக்கள் யாரும் குறுக்கே வந்துவிடக் கூடாது என்று எச்சரிக்கவே, விசில் ஊதுவதையும் அது இல்லாவிட்டால் ஒரு விநோதமான சத்தம் போடுவதையும் செய்கின்றனர். சாதிய படி நிலை அமைப்பின் கடைசி படி நிலையில் துப்புரவுத் தொழிலாளர்கள் இருக்கின்றனர். கடைநிலையில் இருக்கின்ற அவர்களின் உடலும் பொதுமக்களைத் தீட்டுக்குள்ளாக்குவதாகப் பார்க்கப்படுகிறது. இடமும் தீட்டுக்குள்ளாவதால் கழிப்பறைகள் வாழ்கின்ற இடங்களிலிருந்து தள்ளியே கட்டப்படுகின்றன. இன்றும் இந்த நிலை தொடர்கிறது.

காணத்தகாதவர்கள்

அக்ரஹாரத்தில் (பார்ப்பனர்கள் மட்டும் வாழும் குடியிருப்புகள் உள்ள இடம்) மற்றும் பார்ப்பனரல்லாத வீடுகளில், உதாரணமாக வீட்டுக்குப் பின்புறத்தில் கழிப்பறைகள் கட்டப்படுகின்றன. அப்போதுதான் துப்புரவுத் தொழிலாளர்களை அவர்கள் அதற்கென உருவாக்கப்பட்டுள்ள தனி வழியில் வரும்போது பார்க்க முடியாது (அவர்கள் காணத்தகாதவர்களாகக் கருதப்பட்டார்கள்) அந்தத் தனிவழியில் நடந்துவந்து கழிப்பறையைச் சுத்தம் செய்து மலத்தை வாளிகளில் எடுத்துச் செல்வார்கள் (உலர் கழிப்பறை உள்ள வீடுகளில் இது இன்னும் நடைமுறையிலுள்ளது). அதே போன்று பாரம்பரிய இந்திய வீடுகளில் அந்த வீடுகளின் வளாகத்தின் எல்லையில் கட்டப்பட்டிருக்கும். அவர்கள் வருவதற்கும் தனி பாதை அமைக்கப்பட்டிருக்கும். இதில் தெளிவான விஷயம் என்னவெனில் இந்து மதத்தின் கருத்தியலின்படி தீட்டு என்பது ஒருபுறம் இருக்க, இன்னும் மதச்சார்பின்மை என்ற போர்வையில் சாதியக் களங்கமும் வீடுகளில் கழிப்பறைகள் கட்டுவதில் செல்வாக்கு செலுத்தியுள்ளன.

இந்தக் குறிப்பிட்ட தனித்தன்மை காலனிய கட்டடக் கலையிலும் வெளிப்பட்டுள்ளது. சிம்லாவிலுள்ள உயர் கல்வி நிறுவனம் (முன்பு வைஸ்ராய் லாட்ஜ் என்றழைக்கப்பட்டது) மூன்று வழிகளைக் கொண்டது. அதில் ஒரு வழியானது தங்குபவர்களுக்கும் விருந்தாளிகளுக்குமானது. மற்றொரு வழியானது அந்த லாட்ஜில் பணிபுரியும் ஊழியர்களுக்கானது. மூன்றாவதானது துப்புரவுத் தொழிலாளர்களுக்கானது. அதில் அவர்கள் மட்டுமே வந்து போவார்கள். அந்தப் பாதைகளை யாரும் பார்க்க முடியாது. அந்தப் பாதைகள் மாடிப்படிகளின் அடியிலோ அல்லது குகை மாதிரியோ அமைக்கப்பட்டிருக்கும். அவர்கள் மாடி ஏறிச்செல்வதற்கும் தனிப்படிகள் அமைக்கப்பட்டிருக்கும். அவை இப்போது மூடப்பட்டு விட்டன.

சுதந்திர இந்தியாவிலும் டெல்லி மெட்ரோவின் ஆரம்பக்கால திட்டத்தின்படி கழிப்பறைகள் கட்டப்படவில்லை. பின்னர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்ட பின்னர் அந்த ரயில் நிலையத்தில் கழிப்பறைகள் கட்டப்பட்டன.

கழிப்பறையும் தீண்டாமையும்

இதற்குக் காரணம், முந்தைய காலங்களில் கட்டப்பட்டுள்ள வீடுகளிலும் கட்டங்களிலும் கழிப்பறைகள் ஒரு பகுதியாக அமைக்கப்படவில்லை. வீட்டுக்குள் கழிப்பறைகள் இருப்பது பெரும் தீட்டாகக் கருதப்பட்டது. இன்னும் பல கிராமங்களில் வசதி இல்லை என்பது ஒருபுறமிருக்க கழிப்பறைகள் இல்லாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். மிக முக்கியமாக பல கோயில்களில் கழிப்பறைகள் இருப்பதில்லை. அவை கோயிலின் பின்புற வாசலிலோ அல்லது வளாகத்தை விட்டு தள்ளியோதான் கட்டப்பட்டுள்ளன.

தற்போது மதச்சார்பின்மை என்ற போர்வையில் ஸ்வாச் பாரத் அபியான் திட்டத்தில் சாதியானது மறைக்கப்படுகிறது. பொது இடத்தைத் தூய்மைப்படுத்துவது ஒரு சாதியினருக்கே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் துப்புரவுத் தொழிலையோ, அவற்றில் ஈடுபடுபவர்களையோ எதுவும் மாற்ற முடியாது. ஒரு குறிப்பிட்ட சாதிக்கு மட்டும் கட்டாயமாக்கப்பட்டும் பொதுமக்களுக்குத் தன்னார்வத் தொண்டாகவும் தூய்மைப்படுத்துவது மாற்றப்பட்டுள்ளது.

தூய்மை இந்தியா திட்டமானது சுகாதாரப் பணிகள், துப்புரவுப் பணிகள் குறித்த களங்கம் நீக்கப்பட வேண்டும். அதற்கான இடம் மற்றும் கழிவுகள் குறித்த களங்கம் நீக்கப்பட்டு அதில் நவீனப்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும் வரை வெற்றியடைய முடியாது. அதுவரை நமது நகரங்களைத் தூய்மைப்படுத்துவதி்ல் வெற்றி பெற முடியாது. அப்படியே தூய்மைப்படுத்திவிட்டாலும் அதற்குப் பின்னரே சாதிய அமைப்பின் தூய்மையற்ற சாதி இருக்கிறது என்பதை மறக்கக்கூடாது.

*ரவிச்சந்திரன் பத்ரன் என்பவர் தலித் கேமரா என்ற யூட்யூப் சேனலின் நிறுவனர்.*

**தமிழில்:**

சேது ராமலிங்கம்

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

**சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு/ ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ…**

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

**பீம் (BHIM) [Android](https://play.google.com/store/apps/details?id=in.org.npci.upiapp) / [IOS](https://itunes.apple.com/in/app/bhim-making-india-cashless/id1200315258?mt=8)**

**டெஸ் (TEZ) [Android]( https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.nbu.paisa.user) / [IOS](https://itunes.apple.com/in/app/tez-a-payments-app-by-google/id1193357041?mt=8)**

**போன்பே (PhonePe) [Android](https://play.google.com/store/apps/details?id=com.phonepe.app) / [IOS](https://itunes.apple.com/in/app/phonepe-indias-payments-app/id1170055821?mt=8)**

**பேடிஎம் (Paytm) [Android](https://play.google.com/store/apps/details?id=net.one97.paytm) / [IOS](https://itunes.apple.com/in/app/paytm-payments-bank-account/id473941634?mt=8)**

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

**[en.minnambalam.com/subscribe.html](https://en.minnambalam.com/subscribe.html)**

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

**சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *