சிறப்புப் பார்வை: முன்னுதாரணமாகத் திகழும் கேரள அரசு!

public

இராமானுஜம்

**மத்திய அரசின் பாராமுகம், பாஜகவின் துஷ்பிரச்சாரம் ஆகியவற்றையும் மீறி நிவாரணப் பணிகளைச் சிறப்பாகச் செய்துவருகிறது கேரள அரசு**

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம் என்னவெனில் நிவாரண முகாம்களின் செயல்பாடுகள்.

அனைவருக்கும் தரமான உணவு, குழந்தைகளுக்கான உணவுகள், தேவையான உடைகள், சுகாதாரமான, காற்றோட்டமுள்ள அறைகள், கழிப்பறை வசதிகள், மருத்துவ வசதிகள், சேதம் பற்றிய விவரங்களைச் சேகரிக்கும் ஏற்பாடுகள், முகாம்களில் உள்ளவர்கள் சம்பந்தமான எல்லாத் தகவல்களையும் திரட்டுதல் என்று ஒரு தரமான செயல்பாட்டை முன்னிறுத்தி நிவாரண முகாம்கள் இயங்கின.

நிவாரணப் பணிகளின் வீச்சு

இத்தகைய பணிகள் பாதிக்கப்பட்ட மக்களின் மனக்காயத்திற்கு மருந்திடுவதாக அமைந்தன. எல்லாவற்றுக்கும் மேலாக மழை தணிந்து, வெள்ளத்தின் சீற்றம் குறைந்து மக்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்லும் நேரத்தில் அரசு அந்த மக்களுக்கு அளிக்கும் தன்னம்பிக்கை மிகுந்த அறிவிப்புகள் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை.

வீடு திரும்பியவர்கள் வீட்டினுள்ளே நுழையும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள், மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வீட்டினுள்ளே மண்டிக்கிடக்கும் நச்சு வாயுக்களை வெளியேற்றுதல், மின்சார உபகரணங்களை மீண்டும் எவ்வாறு இயக்குவது, பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் பற்றிய எச்சரிக்கை, வீடுகளைச் சுத்தம் செய்வதற்கான நிதி உதவி, தண்ணீர் நிற்கும் இடங்களில் கிருமிகளின் பெருக்கம், கொசுக்களின் தொல்லை, அது தொடர்பான முன்னெச்சரிக்கைகள் என்று பல விஷயங்களை மக்களுக்கு அறிவுறுத்திவருகிறது.

ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் சுகாதாரப் பணிகளைக் கண்காணிக்க ஐந்து சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள், வருவாய்த் துறை அலுவலர்கள் என்று பொறுப்புகளைப் பிரித்து மக்களுக்கு இரவு பகலாக உதவிகளைச் செய்து அவர்களைத் தத்தமது வீடுகளில் மீண்டும் குடியமர்த்த நடவடிக்கை எடுத்துவருகிறது.

இப்படிப்பட்ட நடவடிக்கைகள், இதுவரை இந்தியாவில் ஏற்பட்ட எந்த வெள்ள பாதிப்பின்போதும் எந்த ஊரிலும் இல்லாத புதிய அம்சங்களாகும்.

அடுத்து புத்தகங்களையும் சீருடைகளையும் இழந்த பள்ளிக் குழந்தைகளுக்குப் புத்தகங்கள், சீருடைகள் போன்றவற்றைத் தயாராக வைத்துள்ளதாகவும் விரைவில் அவை அக்குழந்தைகளுக்கு வழங்கப்படும் என்றும் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சான்றிதழ்களையும் ஆவணங்களையும் இழந்தவர்களுக்கு உடனடியாக அவற்றை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வீடிழந்தவர்களுக்கும் வீடுகள், மிக மோசமாக சேதமடைந்தவர்களுக்கும் தங்குவதற்கான மாற்று ஏற்பாடுகள் போன்றவையும் செய்யப்பட்டுள்ளன.

மீண்டும் இயல்பு நிலை

இவ்வளவு பெரிய சேதங்கள் நடந்த ஒன்றிரண்டு நாட்களுக்குள் கேரளாவில் பெரும்பாலான சாலைகளில் மீண்டும் போக்குவரத்தைப் புனரமைக்க முடிந்திருக்கிறது.

கேரளப் போக்குவரத்துத் துறையின் அனைத்துப் பேருந்துகளும் ஓடத் தொடங்கியுள்ளன.

மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட கொச்சி நெடும்பாசேரி விமான நிலையம் தவிர மற்ற அனைத்து விமான நிலையங்களும் போக்குவரத்தை முழுவீச்சில் தொடங்கும் நிலையில் உள்ளன.

மின்சார வாரிய ஊழியர்களின் அர்ப்பணிப்பு மிக்க பணிகளால் இன்னும் சில நாட்களுக்குள் மின் விநியோகத்தைப் பூரணமாகப் புனரமைத்துவிட முடியும் என்ற நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது அரசு. மின்சார ஊழியர்களின் இரவு பகல் பாராத கடும் பணி பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்த மாநிலத்தின் பெரும் பகுதிகளில், தகவல் தொடர்புகள் மீட்டமைக்கப்பட்டுவிட்டன.

வெள்ளம் வடியத் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே தகவல் தொடர்புகள் சீராகத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பேரழிவிலிருந்து கேரளம் வேகமாக மீண்டு வருவதற்கு அந்த மாநில மக்களின் ஒன்றுபட்ட தளராத தன்னம்பிக்கை மிக்க போராட்டம்தான் காரணம் என்றால் மிகையாகாது.

அரசியல் துவேஷம்

ஆனால், இத்தகைய அசாதாரணமான இயற்கை பதிப்பின்போது கூட, மிகச் சிறப்பாக செயல்பட்ட ஒரு அரசுக்குத் துணை நிற்காதது மட்டுமல்லாது… அந்த அரசைத் தூற்றும் வேலையை சில ஊடகங்களின் உதவியோடு காங்கிரஸும் பாஜகவும் செய்தது மிகக் கேவலமான ஒன்று.

காங்கிரஸ் பொறுப்புமிக்க எதிர்க்கட்சியாக ஆரம்பத்தில் அரசுடன் இணைந்து செயல்பட்டாலும், மோசமான விளைவுகள் ஏற்பட்ட இறுதி நாட்களில் அரசியல் லாபமடையும் வேலைகளைச் செய்தது.

பாஜக தொடக்கம் முதலே தனது குள்ள நரி வேலைகளைச் செய்துவந்தது. சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்று நீதிமன்றம் கூறியதால்தான் இத்தகைய பெரும் சேதம் விளைந்தது என்று கூறியது முதல், இணையதளங்களின் மூலம் முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு யாரும் பணம் அனுப்பக் கூடாது என்று கூறியது வரை மிக அற்பத்தனமாக நடந்துகொண்டது.

ஆனால், பொதுவெளியில் நிதி கொடுக்கக் கூடாது என்று கூறிக்கொண்டே ஆர்எஸ்எஸ் நடத்தும் பல கல்வி நிறுவனங்களில் கேரள வெள்ள நிவாரண நிதி வசூலித்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிதியைக் கேரள வெள்ள நிவாரண நிதி என்ற பெயரில் யாருக்காக ஆர்எஸ்எஸ் வசூலித்தது என்று தெரியவில்லை அல்லது ஆர்எஸ்எஸ் யாரிடம் ஒப்படைக்கப் போகிறது என்றோ அல்லது எவ்வாறு செலவிடப் போகிறது என்றோ இதுவரை கூறவில்லை.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் பெண்களுக்குத் தேவையான சானிடரி நாப்கின்களை உதவியாகக் கேட்டதைக்கூடக் கேலி செய்து சமூக ஊடகங்களில் பதிவுகளை இட்டனர் பாஜகவினர்.

கேரள முதல்வர் ராணுவத்தை மோசமாக விமர்சித்ததாக ஒரு ராணுவ வீரர் பேசுவது போன்ற பொய்யான வீடியோ காட்சியைப் பரவவிட்டு அதை ஒரு ராணுவ அதிகாரியே கண்டறிந்து புகார் தெரிவித்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது. பின்னர் அதில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தப்பட்டதும் அம்பலமானது.

ஆர்எஸ்எஸ் மற்றும் அதைச் சார்ந்த அமைப்புகள், சிறப்பாகச் செயல்படும் மாநில அரசின் மீது குற்றம் சுமத்தவும், அரசுக்கு எதிரான பொய்ச் செய்திகளைப் பரப்பவும் முயன்றுவருகின்றன.

குவியும் பாராட்டுகள்

ஆனால், இவை எல்லாவற்றையும் மீறி, கேரளத்திற்குப் பொறுப்பான ராணுவ அதிகாரி, கேரள அரசின் மீட்புப் பணிகள் உண்மையில் அபாரமானவை என்று புகழ்ந்துரைத்தார். கேரள உயர் நீதிமன்றம் தனது மனம் திறந்த பாராட்டுகளைக் கேரள அரசுக்குத் தெரிவித்தது. அதோடு, வெள்ள நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்கள் அரசின் செயல்பாடுகளில் திருப்தி தெரிவித்துள்ளனர். அவர்கள் அரசுக்கு நன்றி கூறுகின்றனர். இதைவிட வேறு அங்கீகாரம் எங்களுக்குத் தேவையில்லை என்று அம்மாநிலத்தை ஆளும் சிபிஐஎம் கட்சி மாநிலச் செயலாளர் கூறியிருப்பது பொருத்தமான ஒன்றாகும்.

சென்னையில் 2015இல் நிகழ்ந்த வெள்ளத்தின்போது தோழர் பினராயி போன்ற ஒரு முதல்வரும் இடது முன்னணி போன்ற ஓர் அரசும் இல்லாத குறையைச் சென்னைவாசிகளால் உணர முடிகிறது. ஓர் அரசு இது போன்ற நேரத்தில் எப்படியெல்லாம் செயல்பட முடியும் என்று ஒட்டுமொத்த இந்தியாவுக்கே உதாரணமாகித் தலைநிமிர்ந்து நிற்கிறது கேரளம்.

எத்தகைய இயற்கை பேரழிவையும் எதிர்கொள்ள தன்னம்பிக்கையை மக்களுக்குத் தரக்கூடிய மாநில அரசாங்கம் இருந்தால் என்ன நடக்கும் என்பதை உலகுக்கு உணர்த்தியிருக்கிறது கேரளத்தை ஆளும் இடது முன்னணி அரசு.

[பகுதி 1](http://www.minnambalam.com/k/2018/08/22/73)

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

**சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு/ ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ…**

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

**பீம் (BHIM) [Android](https://play.google.com/store/apps/details?id=in.org.npci.upiapp) / [IOS](https://itunes.apple.com/in/app/bhim-making-india-cashless/id1200315258?mt=8)**

**டெஸ் (TEZ) [Android]( https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.nbu.paisa.user) / [IOS](https://itunes.apple.com/in/app/tez-a-payments-app-by-google/id1193357041?mt=8)**

**போன்பே (PhonePe) [Android](https://play.google.com/store/apps/details?id=com.phonepe.app) / [IOS](https://itunes.apple.com/in/app/phonepe-indias-payments-app/id1170055821?mt=8)**

**பேடிஎம் (Paytm) [Android](https://play.google.com/store/apps/details?id=net.one97.paytm) / [IOS](https://itunes.apple.com/in/app/paytm-payments-bank-account/id473941634?mt=8)**

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

**[en.minnambalam.com/subscribe.html](https://en.minnambalam.com/subscribe.html)**

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

**சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *