சிறப்புத் தொடர்: சிக்கல் வந்தாலும் நமக்கு நாமே!

Published On:

| By Balaji

வெண்பா கீதாயன்

ஓவியம்: சசி மாரீஸ்

**நீ கூடிடு கூடலே – 38: உறவுகளை அலசும் தினசரி தொடர்**

சின்னச் சின்னப் பிரச்சினைகளையெல்லாம் பெற்றோரிடம் முறையிடுவது பக்குவமான செயல் அல்ல. நாம் வளர்ந்த பெரியவர்கள்; வயது வந்தவர்கள் என்பதால்தான் காதலித்துக் கொண்டிருக்கிறோம். கலவி செய்கிறோம்; ஒன்றாக வாழ்ந்து வருகிறோம். “நேத்து அவன் எனக்கு 100 கிஸ் கொடுத்துப் பறக்க வெச்சிட்டான்” என்று எந்தப் பெண்ணும் பெற்றோரிடம் சொல்வது கிடையாது. ஆனால், சிறு சண்டையில் வாய்த் தகராற்றில் (நாமும் வம்பிழுத்திருப்போம்) ஏதாவது பேச, குழந்தைகள் “கிள்ளிட்டான் என்னைய” என்று சொல்வதுபோலப் புகார் தரக் கூடாது. ஏனெனில் சந்தோஷமான தருணங்களை நம் வீட்டில் பகிர்ந்துகொள்கிற அளவுக்கு நம் சமூகம் வளரவில்லை. மேலைநாடுகளில் இருக்கிற நல்ல பழக்கங்கள் எதையும் நாம் கற்றுக்கொள்ளவில்லை.

அங்கிருந்து நாம் கடத்திய ஒரே விஷயம் லிவிங் டுகெதர், பாலுறவுச் சுதந்திரம் ஆகியவை. அதுவும் அரைகுறைப் புரிதலோடு இங்கு பின்பற்றப்பட்டு “இந்த வெஸ்ட்டர்ன் கல்ச்சரே மோசம்” என்கிற விமர்சனத்தில் மேலைக் கலாச்சாரம் இங்கு தொங்கிக்கொண்டிருக்கிறது. அங்கே தத்தமது டீன்ஏஜ்களில் இருக்கும் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் அது குறித்துப் பேச இயலும். “அப்பா இன்னிக்கு என் பாய் ஃப்ரெண்ட் லிப்லாக் தந்தான்” என்று சொல்ல முடியும். இங்குள்ள அப்பாவிடம் பாய் ஃப்ரெண்ட் பேனா வாங்கித் தந்ததைச் சொல்லவே பயமாக இருக்கும். அதைவிட பாய் ஃப்ரெண்ட் இருப்பதையே சொல்ல முடியாது.

பல வீடுகளில் இன்னும் மொபைலில் பாய் ஃப்ரெண்டிடம் ‘சொல்லுடி’ என்று ஆரம்பிக்கும் பெண்கள்தான் அதிகம். ‘சொல்லுடா’ என்று அழைக்க முடிகிற வீடுகள் உண்மையில் பரந்த மனப்பான்மையாக இருக்கும். அதிலும் எல்லைகள் உண்டு. காதலன் என்று வீட்டில் தெரிந்துகொண்டாலும் “உன் ஃப்ரெண்டா?” என்று கேட்டு நண்பனாக இருக்கும் வரையில் பிரச்சினை இல்லை என்று குறியீட்டு ரீதியாக உணர்த்திச் செல்வார்கள்.

பையன்கள் வீட்டில் அதைவிடக் கொடூரம். ஒரு பெண்ணை வீட்டுக்கு அழைத்துச் செல்லும் நிலை ஏற்படும் சூழலில் அந்த அப்பா வீட்டிலிருந்தால் அவ்வளவுதான். “உன்கூடதான் வேலை பாக்கிறானாமா? பொறுப்பில்லாதவன்… தண்டம்… சம்பாதிக்கிறதை முழுசா வீட்டுக்கு வந்து கொடுக்க மாட்டான்” என்று எவ்வளவு மட்டம் தட்ட முடியுமோ அவ்வளவு மட்டம் தட்டுவார். அதைவிடவும் அடிக்கோடிட்டு, “நீ பொண்ணு பொறுப்பா நடந்துப்பான்னு நெனைக்கிறேன், ஏதாவது அட்வைஸ் பண்ணுமா” என்று நமக்கு மறைமுக எச்சரிக்கை ஒன்றை விடுத்துச் செல்வார்.

இவ்வளவு இறுக்கமான மனநிலை கொண்ட பெற்றோரைக் காதலில் சமரசம் பேச அழைப்பது அடிமுட்டாள்தனம். பெரிய சண்டையென்று வந்தாலும் நீங்களே நிதானமாகப் பேசிப் பிரிந்துவிடுங்கள். பெற்றோரை இழுக்கும்போது இரண்டு குடும்பங்களின் விரோதமே ‘ச்சை… நாம சேர்ந்து இருந்திருக்கலாமோ’ எனத் தோன்ற வைத்துவிடும்.

பிரிய வேண்டும் என்கிற மனநிலையில் இருந்தால் பிரிந்துவிட வேண்டும். பெற்றோர்களிடம் தெரிவித்து விரோதமாகி அதில் காதல் மீண்டும் பிணைந்திட வாய்ப்புகள் அதிகம்.

தாராளமயமாக்கல், நவீனமயமாக்கல் போன்றவற்றின் தாக்கத்தினால் பெற்றோர்களின் மனது வெறும் பொருள்மயமாக்கலால் நிறைந்துள்ளது. எனவே சண்டை என்று நீங்கள் எடுத்துப்போனால் உடனேயே “இதே நான் பாக்குற பையன கட்டிருந்தா நீ ஓஹ்ஹோஹோனு இருந்திருப்ப” என்று ஆரம்பிக்கக்கூடும். பையன் வீட்டிலும் “மொத நாள் அவளைப் பாத்தப்பவே நெனைச்சேன்… அவளும் அவ லிப்ஸ்டிக்கும்… குடும்பப் பொண்ணு மாதிரியா இருக்கா? விட்டுத் தொலைடா தயவுசெஞ்சு… உனக்கென்ன கொறச்சல்… இருநூறு சவரன் போட்டு ராஜகுமாரி மாதிரி பொண்ணு கிடைப்பா” என்று கிடைக்கின்ற கேப்பில் தாயார் உளறக்கூடும்.

இத்தகைய அசம்பாவிதங்கள் நிகழாதிருக்க நம் பிரச்சினையை நாமே தீர்த்துக்கொள்ள முயல வேண்டும். நாம் தேர்ந்தெடுத்த காதலில் சிக்கல்களைத் தீர்த்துக்கொள்வதும் நாமாகத்தானே இருக்கவியலும்.

(காதல் தொடரும்)

(**கட்டுரையாளர்:**

வெண்பா கீதாயன்

எழுத்தாளர். சமகால நிகழ்வுகள், இலக்கியம், உளவியல், சமூகம் சார்ந்த கருத்துகளைப் பல்வேறு ஊடகங்களில் எழுதிவருகிறார்.)

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

**சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு/ ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ…**

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

**பீம் (BHIM) [Android](https://play.google.com/store/apps/details?id=in.org.npci.upiapp) / [IOS](https://itunes.apple.com/in/app/bhim-making-india-cashless/id1200315258?mt=8)**

**டெஸ் (TEZ) [Android]( https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.nbu.paisa.user) / [IOS](https://itunes.apple.com/in/app/tez-a-payments-app-by-google/id1193357041?mt=8)**

**போன்பே (PhonePe) [Android](https://play.google.com/store/apps/details?id=com.phonepe.app) / [IOS](https://itunes.apple.com/in/app/phonepe-indias-payments-app/id1170055821?mt=8)**

**பேடிஎம் (Paytm) [Android](https://play.google.com/store/apps/details?id=net.one97.paytm) / [IOS](https://itunes.apple.com/in/app/paytm-payments-bank-account/id473941634?mt=8)**

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

**[en.minnambalam.com/subscribe.html](https://en.minnambalam.com/subscribe.html)**

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

**சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share