வெண்பா கீதாயன்
ஓவியம்: சசி மாரீஸ்
**நீ கூடிடு கூடலே -37: உறவுகளை அலசும் தினசரி தொடர்**
பெற்றோரிடம் எந்த அளவுக்கு வெளிப்படையாக இருக்கலாம்?
பெற்றோரைப் பொறுத்தவரை எவ்வளவு பரந்த மனப்பான்மையுடன் காதலுக்குப் பச்சைக்கொடி காட்டினாலும் மனதின் ஆழத்தில் ஒரு சிறு நெருடல் இருந்துகொண்டே இருக்கும். பல அப்பாக்களால் காதலன்களைப் பொறுத்துக்கொள்ள முடியாது. பெரும்பாலும் வெளியில் காட்டிக்கொள்ளாவிட்டாலும் நம் காதலனைப் பார்க்கும்போதெல்லாம் ரெஸ்ட்லெஸ் ஆகிவிடுவார்கள். காதலன் என்றில்லை. நண்பனை அழைத்துச் சென்றாலும் இதே நிலை ஏற்படும். அதேபோல அம்மாக்களுக்கும் தன் மகன் இன்னொரு பெண்ணின் பெயரைச் சொல்லும்போது பாதுகாப்பின்மை வரத் தொடங்கும். பக்குவமான பெற்றோர்களும் இருக்கின்றனர். இது அவர்களுக்கான இளமை; அவர்கள் முடிவெடுக்க வேண்டியதென்று. ஆனால் நம்முடைய பெரும்பான்மைச் சமூகம் பிள்ளைகளை ஒருவித முதலீடுகளாகவே பார்க்கிறது.
நிறைய வரதட்சணை கேட்பதற்காகக் கோடிகோடியாகக் கொடுத்து சீட் வாங்குகிறோம். பையன் படித்து பெரியதொரு கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தால் அங்கு நன்றாகப் படித்து மதிப்பெண் எடுத்த ஒரு சாதாரண நடுத்தர வர்க்கப் பெண் அழகாகவும் புத்திசாலியாகவும் தென்படுவாள். அவர்களுக்குள் காதல் ஏற்பட்டால் அந்தப் பையனின் பெற்றோர் நிலை என்ன? ஐயோ இதுக்கா கோடிகோடியா கொடுத்து படிக்க வெச்சோம், எவ்ளோ பெரிய வீட்ல பொண்ணு பார்க்கலாம்னு நெனைச்சோம், எவ்வளவு நகை போடுவாங்க என்று நம்மை ஒரு பொருளீடாக எண்ணிப் பொருமுவார்கள்.
அதேபோல இந்தப்பக்கம் கோடிகோடியாகக் கொட்டி படிக்கவைத்து யூஎஸ், யூகே மாதிரி எங்காவது பெண்ணை அனுப்பி அப்படியே திருமணம் செய்துவைத்துக் கடைசிக் காலத்தில் தாமும் போய் அங்கே செட்டிலாகிவிட வேண்டுமெனக் குழந்தை பிறக்கும்போதே திட்டம்போட்டிருப்பார்கள். அப்பெண் வேலைபார்க்குமிடத்தில் தன்னுடைய குடும்பச் சூழலுக்கு ஏற்ற பகட்டில்லாத பையனைக் காதலிக்க ஆரம்பித்திருப்பாள். பெற்றோர் ஏதாவது காரணம் சொல்லித் தட்டிக்கழிக்க முயல்வார்கள்.
சாதி, மதம், பழக்கவழக்கம் என எத்தனை காரணங்கள் சொன்னாலும் அடிப்படையான காரணம் தன் பிள்ளைகள் மீது கொட்டியுள்ள இன்வெஸ்ட்மென்ட். அதற்கேற்ற வசதியான வாழ்வினை அந்த மகனோ, மகளோ நமக்கு பதிலாகத் தர வேண்டும் என்கிற மாய உரிமையை வேண்டுகின்றனர். ஆனால், குழந்தைகள் ஒரே வார்த்தையில் “என்னைக் கேட்டா பெத்த” என்று மொத்தமாக நொறுக்கிவிட்டு இதையெல்லாம் கடந்துவிடுகின்றனர்.
நீங்கள் பெற்றிருப்பதால் அவர்கள் சொந்தமாக இயங்கும் வரை பார்த்துக்கொள்வது உங்களது பொறுப்பு. நீங்கள் நடந்துகொள்கிற விதத்திலும் உங்கள் அன்பிலும் எதிர்காலத்தில் உங்களைக் கவனித்துக்கொள்ளக்கூடும். அதைச் சிதைக்கும் விதத்தில் முதலீடாக மட்டுமே பிள்ளைகளைப் பயன்படுத்த நினைத்தால் எதிர்காலத்தில் “இந்தா, பணம்தானே, போடுறேன்… அங்கேயே இருந்துக்கோ” என்று உங்களை ஒரு பொருளீடாக மாற்றிவிடுவார்கள்.
அதேபோல காதல் மாதிரியான விஷயங்களில் ஓரளவுக்கு இணக்கமாக நம் பெண் / பையன் அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கின்ற துணையுடன் வாழ்ந்துவிடுவார்கள் என்கிற யூகம் இருந்தால் தயவுசெய்து பிரச்சினை செய்யாமல் ஆதரிக்கப் பழகுங்கள். ஏனெனில் காதலுக்குச் சம்மதிக்காமல் நீங்கள் செய்துவைக்கிற திருமணங்கள் பெரும்பாலும் விவாகரத்தை நோக்கி நகர்கின்றன. அதற்குக் காதலித்த துணையுடனாவது மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.
ஏதாவது சண்டை பற்றிக் கூறினால் நீ வந்துவிடு, அவனோடு வாழாதே, அவளோடு இருக்காதே என்று துர்போதனை செய்வதைத் தவிர்ப்பது நலம். முடிந்த அளவுக்குக் காதலர்களின் சண்டைகளில் பெற்றோர்கள் தலையிடாமல் இருப்பது உத்தமம். நீங்கள் தலையிட்டுப் பெரிய சண்டையாகி இரண்டு குடும்பமும் விரோதமாகும் முன் அவர்களே சண்டையிட்டு, அரைமணி நேரத்தில் அவர்களே கட்டிப்பிடித்து மன்னிப்பு கேட்டபடி சகஜநிலைக்குத் திரும்பக்கூடும்.
(காதல் தொடரும்)
(**கட்டுரையாளர்:**
வெண்பா கீதாயன்
எழுத்தாளர். சமகால நிகழ்வுகள், இலக்கியம், உளவியல், சமூகம் சார்ந்த கருத்துகளைப் பல்வேறு ஊடகங்களில் எழுதிவருகிறார்.)
வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.
சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.
மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.
மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!
**சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு/ ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ…**
1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.
**பீம் (BHIM) [Android](https://play.google.com/store/apps/details?id=in.org.npci.upiapp) / [IOS](https://itunes.apple.com/in/app/bhim-making-india-cashless/id1200315258?mt=8)**
**டெஸ் (TEZ) [Android]( https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.nbu.paisa.user) / [IOS](https://itunes.apple.com/in/app/tez-a-payments-app-by-google/id1193357041?mt=8)**
**போன்பே (PhonePe) [Android](https://play.google.com/store/apps/details?id=com.phonepe.app) / [IOS](https://itunes.apple.com/in/app/phonepe-indias-payments-app/id1170055821?mt=8)**
**பேடிஎம் (Paytm) [Android](https://play.google.com/store/apps/details?id=net.one97.paytm) / [IOS](https://itunes.apple.com/in/app/paytm-payments-bank-account/id473941634?mt=8)**
2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.
**[en.minnambalam.com/subscribe.html](https://en.minnambalam.com/subscribe.html)**
3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.
.
**சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ்அப் எண் +91 6380977477**�,”